வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஏஆர் ரகுமானை ஓரங்கட்டிய அனிருத்.. 8 பிரம்மாண்ட படங்களை கையில் வைத்திருக்கும் ராக் ஸ்டார்

Music Director Aniruth: பொதுவாக படங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்பட்டு வருகிறதோ அதுக்கு இணையாக வரக்கூடிய பாடல்களும் மக்கள் மனதில் இடம் பிடித்து விடும். அந்த வகையில் இளையராஜா பாட்டுக்கு எப்பொழுதுமே அடிமை என்று சொல்வதற்கு ஏற்ப இசைஞானியாக வலம் வந்து விட்டார்.

இவருக்கு அடுத்ததாக அனைவர் மனதிலும் புயலாக புகுந்தவர் தான் ஏ ஆர் ரகுமான். இவருடைய இசையால் கிரங்கடிக்கும் வகையில் மனதிற்கு இதமாக கொடுக்கக் கூடியவர். அப்படிப்பட்ட இவரையே ஓரங்கட்டி தற்போது பட்டித்தொட்டி எல்லாம் பறந்து வருகிறவர் தான் ராக் ஸ்டார் அனிருத்.

Also read: இளையராஜா இப்படி ஒரு மனுசனா.? மொத்த வாழ்க்கையும் புட்டு புட்டு வைத்த ஏ ஆர் ரகுமான்

தற்போது இவர் மட்டும் தான் அனைத்து டாப் நடிகர்களின் படங்களுக்கு வரிசையாக இசையமைத்து வருகிறார். அதனால் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக அனைவரது கண்ணுக்கும் தென்பட்டு இருக்கிறார் . அந்த வகையில் தற்போது எட்டு படங்களுக்கும் மேல் கைவசம் வைத்துக் கொண்டிருக்கிறார்.

அதுவும் அனைத்துமே பிரம்மாண்டமான முன்னணி டாப் நடிகர்களின் படங்கள். அந்த வகையில் நேற்று ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் ரிலீசுக்கு முன்பே மக்களிடத்தில் அதிக ரீச் ஆனதற்கு காரணம் இவருடைய இசை தான் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவருடைய பங்கு முக்கியமாக இருந்தது.

Also read: விஜய்க்கு செய்யாததை ரஜினிக்காக செய்த அனிருத்.. ஹைப்பை ஏற்றிய ஜெயிலர்

இதனை அடுத்து விஜய் படங்களிலும் தொடர்ந்து இவர் தான் இசையமைத்து வருகிறார். மேலும்  விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளிவர இருக்கிறது. இதிலும் இவர் தான் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படமும், இந்தியன் 2 கமல் நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கும் இவர்தான் இசையமைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படம், மற்றும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அவருடைய 12 ஆவது படத்திற்கும் இவர் தான் கமிட்டாய் இருக்கிறார். அடுத்ததாக ரஜினி நடிக்க இருக்கும் தலைவர்170 படத்திலும், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவாரப் படம் மற்றும் கவின் நடிக்க இருக்கும் படத்திற்கும் இவர்தான் இசையமைக்கப் போகிறார். இப்படி தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக சுற்றி வருகிறார் ராக் ஸ்டார் அனிருத்.

Also read: அட்ட காப்பி அடித்த அனிருத்.. அட்லியால் சர்ச்சையில் சிக்கிய ஜவான்

Trending News