Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

தியேட்டர்களை அதிர வைக்க மீண்டும் வரும் ‘அண்ணாமலை’, ‘முரட்டுக்காளை’: ரஜினி பிறந்தநாளுக்குக் காத்திருக்கும் மெகா விருந்து!

தியேட்டர்களை அதிர வைக்க மீண்டும் வரும் ‘அண்ணாமலை’, ‘முரட்டுக்காளை’: ரஜினி பிறந்தநாளுக்குக் காத்திருக்கும் மெகா விருந்து!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படங்களுக்கு இன்றளவும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.குறிப்பாக,ரஜினியின் ஆரம்பகால படங்கள் அவரது ஸ்டைல், நடிப்பு, வசனங்கள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,தற்போது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற‘அண்ணாமலை’மற்றும் ‘முரட்டுக்காளை’ ஆகிய இரண்டு படங்களும் நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் தியேட்டர்களில் வெளியாக உள்ளன. அதன்படி,இந்த இரண்டு படங்களும் 4K தரத்திலும், டால்பி அட்மோஸ் சவுண்ட் தொழில்நுட்பத்திலும் மெருகேற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த இரண்டு படங்களையும் தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால்,தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தியேட்டர்களில் கொண்டாட்டமான அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் ரஜினியின் பழைய படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டபோது ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு குறிப்பிடத்தக்கது.அந்த வரிசையில், ‘அண்ணாமலை’படத்தின் ரீரிலீஸ் ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வரும்.அதேபோல்,‘முரட்டுக்காளை’படத்தையும் புதிய தொழில்நுட்பத்தில் தியேட்டர்களில் காண்பது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக அமையும்.

பழைய படங்களை புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் தியேட்டர்களுக்குக் கொண்டு வரும் இந்த முயற்சி, ரஜினி ரசிகர்களிடையே இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெரிய ஸ்கீரினில் தலைவரின் பழைய மேஜிக்கை மீண்டும் ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.