வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மெத்தனத்தால் தனக்குத்தானே சூனியம் வைத்த லைக்கா.. அயலான், கேப்டன் மில்லரை ஓவர் டேக் பண்ணிய படம்

Another movie that overtakes Ayalan and Captain Miller: பொதுவாக பண்டிகை தினத்தை ஒட்டி திரையரங்களில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகும். அதுவும் பொங்கலுக்கு வெளிவரும் படங்கள் கண்டிப்பாக வசூல் அளவில் பட்டையை கிளப்பி விடும். அதற்கு காரணம் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஆவது விடுமுறை இருக்கும் என்பதால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்கு அனைவரும் திரையரங்குகளுக்கு வருவார்கள். அதன் மூலம் படம் வசூலில் சாதனை படைத்து விடும் என்பதனால் தான்.

அந்த வகையில் இந்த வருடம் சிவகார்த்திகேயன் மற்றும் தனுசும் மோதிக்கொண்டு அவர்களுடைய அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படத்தை வெளியிட்டார்கள். பொதுவாக இப்ப வரக்கூடிய படங்கள் அனைத்தும் வன்மத்தையும், ரத்தக்களரியான படங்களும் ஆகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட படங்களை சின்ன குழந்தைகளை கூட்டிட்டு பார்க்க முடியாது. அப்படித்தான் கேப்டன் மில்லர் படமும் இருக்கிறது.

இந்த நேரத்தில் சிவகார்த்திகேயனின் அயலான் படமும் வெளிவந்தது. சிவகார்த்திகேயன் படம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க ஆசைப்படுவார்கள். அதுவும் அயலான் படம் குழந்தைகள் மனதை கவரும் வகையில் ஏலியன்ஸ் கதையை வைத்து வந்தது. இருந்தாலும் இந்த இரண்டு படங்களுமே விமர்சன அளவில் பெருசாக சொல்லும் படியாக மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கவில்லை.

Also read: அயலான் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விபரத்தை வெளியிட்ட படக்குழு.. கேப்டன் மில்லரை முந்த முடிஞ்சதா?.

இதில் அயலான் படமாவது கொஞ்சத்துக்கு கொஞ்சம் சேர்த்துக்கலாம், தனுஷின் கேப்டன் மில்லர் படம் தயவுசெய்து போய் பார்த்து ஏமாற வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு தான் கதை இருக்கிறதாம். இப்படி இந்த இரண்டு படங்களுக்கு நடுவே சத்தமே இல்லாமல் வந்த மூன்றாவது படம் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு தியேட்டர் காட்சிகள் சரியாக கிடைக்கவில்லை.

அந்த வகையில் இப்படத்திற்கு முறையாக பிரமோஷன் செய்திருந்தால் கண்டிப்பாக வசூல் அளவிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்திருக்கும். அப்படி என்ன படம் மக்களிடம் ரீச் ஆகி இருக்கிறது என்றால் அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த Mission Chapter 1. இப்படம் பார்ப்பதற்கு ரொம்பவே சூப்பராக இருக்கிறது.

முக்கியமாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே அவருடைய கேரியரில் மிக பெஸ்டான படம் என்று சொல்லும் அளவிற்கு மக்களை கவர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதனால் பெரிய அளவில் லைக்கா நிறுவனம் மெனக்கீடு செய்திருந்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயமாக இருந்திருக்கும்.

Also read: சிவகார்த்திகேயனின் 5 வருட கனவு.. அனல் பறக்கும் அயலான் ட்விட்டர் விமர்சனம் இதோ!

Trending News