சமீபகாலமாக இணையத்தில் அதிகம் பேசுவது பீஸ்ட் படத்தின் அப்டேட் பற்றி தான். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பீஸ்ட் படத்தில் தற்போது இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் துப்பாக்கி படத்தை போல் தீவிரவாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும்.
இதனால் பீஸ்ட் படத்தில் இரண்டு, மூன்று வில்லன்கள் என்று பேசி வருகின்றனர். அதில் ஒரு வில்லன் இயக்குனர் செல்வராகவன் என்றும் கூறுகின்றனர். தீவிரவாதிகளின் கதை என்பதால் அதற்கு ஏற்றார் போல் ஒரு வில்லனை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழ் படத்தில் நடித்துள்ளாராம்.
பீஸ்ட் படத்தில் பயங்கரமான பெரிய வில்லன் அங்கூர் விகல். இவர் தமிழில் தனுஷின் மரியான் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் தனுஷின் மாறன் படத்திலும், ஸ்லம்டாக் மில்லினர் படத்திலும் நடித்துள்ளாராம். பீஸ்ட் படத்தில் மூன்று வில்லன்களில் ஒருவர் செல்வராகவன் என்பது தெரிந்தது.
ஆனால் மற்ற இரண்டு வில்லன்களில் தற்போது அடுத்த வில்லன் அங்கூர் விகல் என்பதும் தெரிந்துவிட்டது. மற்றுமொரு வில்லன் யார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் விரைவில் அடுத்த வில்லன் யார் என்பது தெரியவரும்.
பீஸ்ட் படத்தில் ஜார்ஜியாவில் அனல் பறக்கும் கார் ஃபைட் சீன்கள் படப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவிலும் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தில் அதிக சண்டை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இப்படத்தின் ரிலீஸுக்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.