வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரகாஷ்ராஜ் லெவலுக்கு பார்வையாலேயே மிரட்டிய வில்லன்.. கமலுக்கே டஃப் கொடுத்தவருக்கு வந்த கெட்ட நேரம்

சில நடிகர்கள் முதல் படத்திலேயே தங்களுடைய சிறந்த நடிப்பால் பயங்கரமாக ஸ்கோர் செய்து விடுவார்கள். பொதுவாக சினிமாவை பொறுத்தவரை குணச்சித்திர கதாபாத்திரங்களை விட நெகட்டிவ் ரோல் பண்ணுபவர்களை ரசிகர்கள் அதிகமாக கவனிப்பார்கள். மேலும் வில்லன் கேரக்டரை சிறப்பாக செய்பவர்களுக்கென்று ரசிகர் பட்டாளமே உருவாகிவிடும்.

என்னதான் படம் பார்க்கும் போது திட்டி தீர்த்தாலும் எம் என் நம்பியார், எம் ஆர் ராதா, ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்ற வில்லன்களுக்கு ரசிகர்கள் அதிகம். இந்த லிஸ்டில் சேர்ந்தவர் தான் நடிகர் டேனியல் பாலாஜி. நெகட்டிவ் ரோல்களில் இவர் பயங்கரமாக மிரட்டி வந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இவரை சினிமாவில் பார்க்க முடிவதில்லை.

Also Read: தளபதி 63 பட வாய்ப்பு எப்படி வந்தது.. டேனியல் பாலாஜி சொல்லும் விளக்கம்

பிரபல சீரியலான சித்தி நாடகத்தில் டேனியல் என்னும் கேரக்டரில் நடித்தவர் தான் பாலாஜி. சித்தி வெற்றிக்கு பிறகு நடித்த அடுத்த நாடகத்தில் இவருடைய பெயர் ‘டேனியல் பாலாஜி’ என மாற்றப்பட்டது. சின்னத்திரையில் இருந்த இவர் படிப்படியாக தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு வெள்ளித்திரைக்கு வந்தார். வெள்ளித்திரையில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில்.

அதன் பின்னர் டேனியல் பாலாஜி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் திரைப்படம் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுக்கு வில்லனாக நடித்திருந்தார். டேனியல் பாலாஜி ரசிகர்களால் கவனிக்கப்பட்டது இந்த திரைப்படத்தில் தான். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Also Read: காணாமல் போன 5 வில்லன் நடிகர்கள்.. இன்றுவரை மறக்க முடியாத சொர்ணாக்கா

டேனியல் பாலாஜிக்கு கோலிவுட்டில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த திரைப்படம் பொல்லாதவன். 2007 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தில் இவர் நெகடிவ் கேரக்டரில் கலக்கி இருந்தார். கமல், விஜய் மிகப்பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி.

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த இவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. நடிகர் விஜயின் பைரவா, பிகில் திரைப்படங்களுக்கு பிறகு இவரை சினிமாவில் பார்க்க முடிவதில்லை. கிட்டத்தட்ட மூண்டு ஆண்டுகளாக இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கடைசியாக டேனியல் பாலாஜி நடித்தது தளபதியின் பிகில் திரைப்படம் தான்.

Also Read: என்ன மீறி படத்தை ரிலீஸ் பண்ணிடுவியா.. விஜய்க்கு உதயநிதி போடும் ஸ்கெட்ச்

Trending News