வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

3 லட்சம் வாக்குகளை கைப்பற்றிய அர்ச்சனா.. மாயக்காரியை காப்பாற்ற பலியாடாக போகும் போட்டியாளர் இவர்தான்

Biggboss 7-Archana: இந்த வாரம் முழுவதும் பரபரப்பாக இருந்த பிக்பாஸ் வீடு இப்போது கொஞ்சம் அமைதி அடைந்திருக்கிறது. அதாவது போட்டியாளர்களுக்கு கத்தை கத்தையாய் பணத்தை காட்டிய பிக்பாஸ் இறுதியாக 16 லட்சம் பணப்பெட்டியை வைத்தார்.

இதுதான் சமயம் என காத்திருந்த பூர்ணிமா அலேக்காக பெட்டியை தூக்கிக்கொண்டு பிக்பாசுக்கு டாட்டா காண்பித்து இருக்கிறார். அதை தொடர்ந்து நாளை யார் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக இருக்கிறது.

அதன்படி தற்போதைய ஓட்டு நிலவரத்தில் அர்ச்சனா தான் மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக மணி, தினேஷ், விசித்ரா, விஜய் வர்மா, மாயா, பூர்ணிமா இருக்கின்றனர்.

Also read: ஒரு போஸ்ட்க்கு 100 ரூபாய்.. இணைய கூலிப்படை செய்த வேலை, ஸ்க்ரீன் ஷாட்டுடன் மாட்டிய பிக்பாஸ் விஷப்பூச்சி

இதில் பூர்ணிமா வெளியேறிய நிலையில் மாயா தான் நியாயப்படி நாளை எலிமினேட் செய்யப்பட வேண்டும். ஆனால் வழக்கம் போல இந்த மாயக்காரியை காப்பாற்றுவதற்காக விஜய் டிவி ஒரு பெரிய சூழ்ச்சி செய்திருக்கிறது.

அந்த வகையில் விஜய் வர்மா அல்லது மணி இருவரையும் வெளியேற்றுவதற்கு பிளான் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பூர்ணிமா வெளியேறியதால் ஒருவரை மட்டும் வெளியேற்றுவதற்கு பிக் பாஸ் குழு முடிவு செய்திருக்கிறது.

voting-bb7-vijay tv
voting-bb7-vijay tv

ஆனால் இந்த முடிவு இரண்டாக கூட மாறலாம் என்கிறது நம்ப தகுந்த வட்டாரங்கள். இதில் விஜய் வர்மா வெளியேற்றப்படுவது கூட ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கிறது. ஆனால் ஓட்டு நிலவரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மணியை விஜய் டிவி டார்கெட் செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: 40% வாக்குகளை வாரி சுருட்டிய அர்ச்சனா.. கார்ப்பரேட் புத்தியை காட்டும் விஜய் டிவி, பிக்பாஸ் டைட்டிலில் வைத்த ட்விஸ்ட்

Trending News