சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இவிங்க பைத்தியமா இல்ல நம்மள பைத்தியமா ஆக்குறாங்களா.. பாரதி மாமா டவுசர் கிழிஞ்சுடுச்சே!

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் இவ்வளவு நாள் கழித்து இப்போதுதான் பாரதிக்கு ஞானோதயம் வந்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். இந்த ரிப்போர்ட் வருவதற்கு முன்பே வெண்பா பாரதியின் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார்.

ஆனால் வெண்பாவின் அம்மா, ரோஹித் பணக்காரன் இல்லை என்பதை தெரிந்தும் அவன் தன்னுடைய மகளை மனதார காதலிக்கிறார் என்பதால் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க பத்திரிக்கை அடித்து அதை பாரதி குடும்பத்தினரிடம் கொடுக்க சென்றிருக்கிறார்.

Also Read: 6 மாசம் என்னோட உறவிலிருந்த, உன் ரேஞ்சே வேற.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளுக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த தயாரிப்பாளர்

ஏற்கனவே பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்த நிலையில், அவளுடைய பத்திரிக்கை வீடு தேடி வந்திருப்பதை பார்த்ததும் ஷாக் ஆகி உள்ளார்.

மேலும் வெண்பா, கண்ணம்மாவிடம் தன்னுடைய பத்திரிகையை கொடுத்து பம்முகிறார். இப்படி பைத்தியக்காரத்தனமான வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் சீரியலின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சின்னத்திரை ரசிகர்களை தன் பைத்தியமாக ஆக்குகிறார்கள்.

Also Read: சிக்கவைத்து களி தின்ன வைக்கும் வெண்பாவின் அம்மா.. ஆடி போன மாப்பிள்ளை

மேலும் பாரதி தன்னுடைய மகள் ஹேமாவிற்கு அம்மாவாக காட்டிய படத்தில் இருப்பவர் பாரதியின் கல்லூரி காதலி என்ற உண்மை அனைவருக்கும் வெட்ட வெளிச்சமானது. ஏனென்றால் பாரதி காதலித்த பெண் இறந்துவிட்டதாகவும், அவர் ஹேமாவின் உண்மையான அம்மா இல்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்தது பாரதியின் டவுசர் கிழிந்து தொங்குகிறது.

உண்மையான அம்மா யார் என்று காட்ட மறுக்கும் பாரதியிடம், ‘ஏன் பொய் சொன்னீர்கள்’ என்று ஹேமா கேட்க உடனே இன்னும் சில நாட்களில் உண்மையான அம்மா யார் என்ற விஷயத்தை சொல்வதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்.

Also Read: பாக்யா முன் அவமானப்பட்ட ராதிகா.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

Trending News