திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

அடுத்த சூப்பர் ஸ்டாராக ஆசைப்படுகிறீர்களா.? லாபகமாக பதில் அளித்து எஸ்கேப்பான சிவகார்த்திகேயன்

Actor Sivakarthikeyan: சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் தான் என்று பலரும் கூறிவருவதால், இந்தக் கேள்வியை செய்தியாளர்கள் அவரிடமே கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர் லாபகரமாக பதில் சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார்.

சுமார் 3000 மேடைகளில் எல்லாம் நடிகர்களை போல் மிமிக்ரி செய்து சினிமாவிற்குள் நுழைந்ததால், எல்லா நடிகர்களின் பாதிப்பும் எனக்கு இருக்கும். அதை என்னால் அவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அப்படிதான் சூப்பர் ஸ்டாரை போல சிறப்பாக மிமிக்கிரி செய்ததால் நிறைய பேர் அதை பாராட்டி வளர்த்து விட்டனர்.

Also Read: நான் யானை இல்ல குதிரை! சூப்பர் ஸ்டார் சொன்ன வார்த்தை.. நெல்சனை வைத்து தலைவர் ஆடும் ஆடு புலி ஆட்டம்

அதன் தாக்கத்தால் தான் அவரது தோற்றம், பேச்சு, காமெடி கலந்த நடிப்பு அனைத்தும் சிலருக்கு ரஜினியை ஞாபகப்படுத்துகிறது. மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்ததால்தான் இதெல்லாம் என்னை பின் தொடர்ந்து வருகிறது. தொலைக்காட்சியின் மூலம் சினிமாவிற்கு வந்த பிறகு காமெடி தான் என்னுடைய அடையாளமாக இருந்தது.

என்னுடைய படங்கள் ஜாலியாக இருக்கிறது, நன்றாக இருக்கிறது என ரசிகர்கள் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு சிறந்த நடிகராக இருப்பதை காட்டிலும் சிறந்த என்டர்டைனராக இருப்பது தான் என்னுடைய மிகப்பெரிய ஆசை. ஏனென்றால் பெஸ்ட் என்டர்டைனர் என்பதை மக்கள் சிலருக்கு தான் கொடுப்பார்கள்.

Also Read: தனியாக தலைவர் மாலத்தீவு சென்றதன் ரகசியம்.. 2 படங்கள் முடித்தும் நிம்மதி இல்லாத பொழப்பு

அப்படி ஒரு விஷயத்தை தான் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதை நான் சிறப்பாக செய்யணும்னு நினைக்கிறேன். சிறந்த என்டர்டைனராக மட்டும் இருந்துவிட்டால், என்னுடைய திறமை வளராது என்ற பயம் இருக்கிறது. ஆனால் இப்போது நல்ல நல்ல இயக்குனர்களின் கைவசம் சென்று என்னுடைய நடிப்பை மேலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அப்படிதான் மாவீரன் படத்தில் மடோன் அஸ்வின் கிடைத்தார்.  இவர் மட்டுமல்ல என்னை அறிமுகப்படுத்திய பாண்டியராஜன் முதல் எல்லா இயக்குனர்களும் என்னிடம் இருக்கும் பெஸ்ட்டை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். அதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று நாசுக்காக பதில் சொல்லிவிட்டார்.

Also Read: பிசிறு தட்டாமல் ரஜினியை பாலோ செய்யும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் பட தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்

Trending News