கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெறுமையை உணர்ந்த போது கிரிக்கெட் உலகின் கடவுளாக வந்தவர் தான் இவர். சச்சினுக்காக மட்டுமே கிரிக்கெட் பார்க்க தொடங்கிய பெரும்பாலான இந்தியர்கள் உண்டு. அவர் அவுட் ஆனால் இந்தியா தோல்வி தான் என அதன் பிறகு முழு ஆட்டத்தை பார்க்க மாட்டார்கள்.
இந்திய கிரிக்கெட் உலகில் அதிக ரன்கள் எடுத்தவர் , நூறு முறை செஞ்சுரி அடித்தவர் என சச்சின் செய்யாத சாதனைகள் இல்லை. இந்திய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்காகவும் இவர் விளையாடினார். கடந்த 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். ஆனால் இன்றுவரை சச்சினுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.
Also Read:சிறுபிள்ளைத்தனமாக மூஞ்சை காட்டும் விராட் கோலி.. சௌரவ் கங்குலி கொடுத்த பெரிய தண்டனை
உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை தலைநிமிர செய்த சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த கிரிக்கெட் வாரிசாக களம் இறங்கி இருக்கிறார். அர்ஜுன் கடந்த 2018 ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஸ்ரீலங்காவை எதிர்த்து விளையாடினார். வழக்கம் போல பிரபலத்தின் வாரிசு என்பதால் இவர் மீது நெகட்டிவ் விமர்சனங்களும் வைக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்ட இவர் காயம் காரணமாக வெளியேற வேண்டிய நிலைமை ஆனது. அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டும் மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டு பிளேயிங் 11ல் கூட வர முடியாமல் போனது. இப்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இவர் எடுத்த விக்கெட் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது.
Also Read:ஐபிஎல்லை மிஸ் செய்த 5 நட்சத்திரங்கள்.. கார் விபத்தால் மொத்த கேரியரையும் இழந்த ரிஷப் பண்ட்
சமீபத்தில் அர்ஜுன் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் ஒருவரை பற்றி பேசியிருக்கிறார். கையில் அடிபட்டு 9 தையல்கள் போடப்பட்டிருக்கும் நிலையிலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும் விராட் கோலி தான் தனக்கு பிடித்தவர் எனவும், என் அப்பா கிரிக்கெட்டின் கடவுளாக இருந்தாலும், விராட் தான் என்னுடைய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று சொல்லியிருக்கிறார்.
விராட் கோலி பெங்களூரு அணிக்காக்கா இம்முறை ரொம்பவும் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறார். 6 போட்டிகளில் மூன்று போட்டிகளில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் விராட் 75 செஞ்சுரிகளை கடந்து விட்டார். இன்னும் சில வருடங்களில் 100 வைத்து செஞ்சுரியை கடந்து சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.