வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிவகார்த்திகேயன் வராரு, ஓரமா நில்லுங்க.. பிரபல நடிகரை அசிங்கப்படுத்திய பவுன்சர்ஸ்

இன்றைய தேதிக்கு தவிர்க்க முடியாத தமிழ் சினிமா நடிகராக உருவெடுத்தவர் சிவகார்த்திகேயன். 100 கோடி வசூல் என்பது முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த நிலையில் டாக்டர் படத்தின் மூலம் தன்னாலும் 100 கோடி வசூல் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி முன்னணி நடிகர்களின் வரிசையில் இணைந்து விட்டார்.

சிவகார்த்திகேயன் வளர்ச்சி பல இளைஞர்களுக்கும் உந்துகோலாக அமைந்துள்ளது. சாதாரண இடத்திலிருந்தும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார். எப்போதுமே எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி உழைப்பவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் தான்.

சமீபத்தில் தமிழ் சினிமாவுக்கே பைனான்ஸ் செய்யும் பைனான்சியர் அன்புச்செழியன் மகள் திருமணம் நடைபெற்றது. ஒட்டு மொத்த தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் டெக்னிஷியன் என அனைவரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் அருண்விஜய் போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனை விட அருண் விஜய்க்கு அந்த இடத்தில் மரியாதை குறைவாக இருந்தது தான் ஆச்சரியமே. சிவகார்த்திகேயன் வரும்போது ஏகப்பட்ட கூட்டம் கூடியதால் அங்கிருந்து அவரை பத்திரமாக மீட்டு செல்ல பவுன்சர் போராடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் அருண்விஜய் உள்ளே வர, சிவகார்த்திகேயன் வருகிறார் தள்ளி நில்லுங்கள் எனக்கூறி அவரை ஓரங்கட்டி நிற்க வைத்து விட்டனர்.

அருண் விஜய் ஒரு சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு, தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று என சிவகார்த்திகேயனை கிண்டல் செய்யும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். பிறகு அது என்னுடைய அட்மின் செய்த வேலை என்ன மாற்றிவிட்டார்.

அன்று அருண்விஜய் சொன்னதை இன்று சிவகார்த்திகேயனை வைத்து அவரது ரசிகர்கள் அருண் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். உண்மையாலுமே சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்பதை யாராலும் மாற்ற முடியாது. அருண் விஜய் வாரிசு நடிகராக இருந்தாலும் அவரை விட பல மடங்கு வியாபாரத்தில் முன்னணியில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Trending News