சார்பட்டா படம் ஆர்யாவுக்கு எழுதப்பட்ட கதை இல்ல.. சீக்ரெட்டை உடைத்த பா ரஞ்சித்

ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், பசுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் அமேசான் பிரைம் இல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சார்பட்டா பரம்பரை படத்தை கே9 ஸ்டுடியோஸ் தயாரித்தது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்  இசையமைத்திருந்தார். இப்படம் ஆர்யாவுக்கு மிகுந்த பாராட்டைப் வாங்கித் தந்தது. அதேபோல் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கணும் பிரபலமானார்.

சார்பட்டா பரம்பரை படம் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் முதலில் நடிகர் கார்த்தியை மனதில் வைத்து தான் சார்பட்டா பரம்பரை படத்தின் கதையை எழுதி உள்ளார். அதன்பின்பு சில தேதி பிரச்சினை காரணமாக கார்த்தி இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

அதன்பிறகு படக்குழு சூர்யாவிடம் அணுகி உள்ளது. ஆனால் கால்ஷீட் மற்றும் ஒரு சில பிரச்சினைகள் காரணமாகவும் சில சீன்களில் நடிக்க மாட்டேன், சில வசனங்கள் பேச மாட்டேன் என சூர்யா கூறி உள்ளார். அண்ணன், தம்பி இருவரும் சார்பட்டா பரம்பரை படத்தை தவற விட அந்த வாய்ப்பு ஆர்யாவுக்கு கிடைத்தது.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஆர்யா தன்னுடைய திறமையான நடிப்பை காட்டி அசத்தியிருந்தார். அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.

இவ்வாறு பல இடையூறுக்கு பின்பு சார்பட்டா பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →