வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அடங்கப்பா! ஒரிஜினல் அரசியல்வாதியே தோத்துடுவாங்க.. கேப்டன் சமாதியில் நடித்து மாட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh-Vijayakanth: கேப்டன் இறந்து ஒரு வாரம் கடந்துவிட்டது. புத்தாண்டு மயக்கத்திலிருந்து தெளிந்த அனைவரும் இப்போதுதான் ஒவ்வொருவராக வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அதன்படி நேற்று சிவகுமார், கார்த்தி, அருண் விஜய் ஆகியோர் கேப்டன் சமாதிக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து இன்று வந்த சூர்யா மனம் உடைந்து கதறி அழுதது ஆச்சரியமாக இருந்தது. அந்த வீடியோ தான் இப்போது வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியது சர்ச்சையாக மாறி இருக்கிறது.

ஏனென்றால் நேற்று அவர் ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேப்டன் மரணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கடை திறப்பு விழாவுக்கு வந்திருக்கிறேன். அதைப்பற்றி மட்டும் கேளுங்கள் என்று கூறினார்.

Also read: சிகிச்சையில் நடந்த மிகப்பெரிய தவறு.. விஜயகாந்த் உடல்நிலை மோசமானதற்கு முக்கிய காரணம்

அது மட்டுமல்லாமல் நான் கேப்டன் இறந்த போது பாண்டிச்சேரியில் இருந்தேன். அதை எடுத்து இப்போது கடை திறப்பு விழாவுக்கு வந்திருக்கிறேன். இது தொடர்பாக கேள்வி கேளுங்கள் என்று கூறியது கடும் விமர்சனமாக மாறியது. எப்போதுமே பொதுவாழ்வில் இருக்கும் பிரபலங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பேச வேண்டும்.

அதை மறந்து வாய்க்கு வந்ததை பேசிய ஐஸ்வர்யாவை ஒட்டுமொத்த மக்களும் கழுவி ஊற்றினார்கள். இந்நிலையில் அவர் கேப்டன் சமாதிக்கு வந்து உருக்கமாக அஞ்சலி செலுத்தியதை பார்க்கும்போது என்ன நடிப்புடா சாமி என்று தான் கேட்க தோன்றுகிறது.

மேலும் நேற்று ஒரு பேச்சு பேசிவிட்டு இன்று அப்படியே அந்தர் பல்டி அடித்திருக்கும் இவரை பார்த்தால் ஒரிஜினல் அரசியல்வாதியே தோற்று விடுவார்கள். ஏதோ பாண்டிச்சேரி வேற்று கிரகத்தில் இருப்பது போல் பேசிய ஐஸ்வர்யா இப்போது கேப்டன் சமாதிக்கு வந்து அவர் நல்லவர் என்றெல்லாம் நடித்து மீடியாவில் சிக்கியிருக்கிறார்.

Also read: விஜய்யை சாவு கூட்டத்தில் அசிங்கப்படுத்தியதால் நடக்கப் போகும் விபரீதம்.. ஏற்கனவே நடந்த போர்க்களம்

Trending News