சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

பாலிவுட்டிலும் கைவரிசை காட்டிய அட்லி.. ஷாருக்கான் படம் இந்தப் படத்தின் காப்பியா ?

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனரான அட்லி அதன்பிறகு தளபதி விஜய்யை வைத்து தொடர்ந்து 3 வெற்றி படங்களை கொடுத்தார். இந்நிலையில் மிகக்குறுகிய காலத்திலேயே பாலிவுட் செல்லும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்துள்ளது. தற்போது பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானை வைத்து அட்லி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா மற்றும் பிரியாமணி கதாநாயகியாக நடிக்கின்றனர். தற்போது இப்படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் ஷாருகான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

அதிலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு தான் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்தி இணையத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது ஷாருக்கான் இப்படத்தில் RAW பிரிவு அதிகாரியாக நடிக்கிறாராம். மேலும் அவரது மகனாகவும் ஷாருக்கான் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அட்லி இயக்கும் இந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தின் சாயலில் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது சுதந்திர போராட்ட வீரரான சேனாதிபதி கதாபாத்திரத்தில் கமல் வயதான தோற்றத்தில் இருந்தார். இதற்காக அவருக்கு பிராஸ்தடிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது.

தற்போது அதையே ஷாருக்கானுக்கு ஜவான் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். அதேபோல் சேனாதி மகனாக சந்துரு லஞ்சம் வாங்கும் அதிகாரியாக இருப்பார். அதேபோல் அட்லீ படத்திலும் ஷாருக்கானின் மகன் கதாபாத்திரம் எதிர்மறையாக உள்ளது. இதனால் இந்தியன் படத்தை தான் அட்லி பாலிவுட்டில் காப்பியடிக்கிறார் என்ற விமர்சனங்கள் வருகிறது.

மேலும் அட்லி இயக்கத்தில் வெளியான முதல் படமான ராஜா ராணி படமே மோகன், ரேவதி நடித்த மௌன ராகம் படத்தின் காப்பி என்ற விமர்சனங்கள் அப்போது வெளியானது. தற்போது பாலிவுட்டிலும் ஷங்கர் படத்தை அட்லீ காப்பியடிக்கிறார் என்ற நெகடிவ் விமர்சனங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது .

Trending News