Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Atlee : 75 ஆயிரம் சம்பளத்தை விட்டு வந்தவரை 3500 கொடுத்து அவமானப்படுத்திய அட்லீ.. புலம்பிய கவின் பட இயக்குனரின் அப்பா

Atlee : 75 ஆயிரம் சம்பளத்தை விட்டு வந்தவரை 3500 கொடுத்து அவமானப்படுத்திய அட்லீ.. புலம்பிய கவின் பட இயக்குனரின் அப்பா

இயக்குனர் அட்லீயின் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றும். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ. அதன் பிறகு விஜய்யுடன் கூட்டணி போட்டு தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தார். அதற்கு அடுத்தபடியாக பாலிவுட் பக்கம் பறந்து […]

இயக்குனர் அட்லீயின் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றும். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ. அதன் பிறகு விஜய்யுடன் கூட்டணி போட்டு தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தார். அதற்கு அடுத்தபடியாக பாலிவுட் பக்கம் பறந்து விட்டார்.

அங்கும் ஜவான் என்று ஷாருக்கானுக்கு மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து வசூலை அள்ளியிருந்தார். இதன் மூலம் அவரது சம்பளம் அதிகப்படியாக உயர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் அட்லியை பற்றி நடிகர் ஒருவர் கூறியதுதான் இப்போது வைரலாகி வருகிறது.

வருகின்ற மே பத்தாம் தேதி கவின் ஸ்டார் படம் வெளியாகிறது. இந்த படத்தின் இயக்குனர் இளன் தந்தையும் ஒரு நடிகர் தான். பல படங்களில் நடித்த பாண்டியன் அட்லியின் ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். இது குறித்து சமீபத்தில் பேசினார்.

500 ரூபாய் சேர்த்து கொடுக்க சொன்ன அட்லீ

அதாவது ஏ வெங்கடேஷ் மலேசியாவில் ஒரு சூட்டிங்காக 75 ஆயிரம் சம்பளத்திற்கு பாண்டியனை அழைத்தாராம். ஆனால் அட்லீயை கூப்பிட்டவுடன் அந்த படத்தில் ஜெய், நயன்தாரா போன்ற பிரபலங்கள் நடிப்பதால் அந்த படத்திற்கு சென்று விட்டாராம். கடைசியில் அங்கு 3000 தான் சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

உடனே அட்லீ இடம் சென்ற பாண்டியன் தனக்கு வேறொரு படத்தில் 75,000 சம்பளம் கொடுப்பதாக சொன்னார்கள். அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தான் இந்த படத்தில் நடிக்க வந்தேன் என்று கூறியிருக்கிறார். அப்படியா இவருக்கு இன்னும் 500 ரூபாய் சேர்த்து கொடுங்க என்று அட்லீ கூறினார்.

மொத்தமாக ராஜா ராணி படத்திற்கு தனக்கு 3500 கிடைத்தது. அப்போது கேசியரிடம் சென்ற போது இப்போது வேண்டுமானால் உங்களது சம்பளம் இதுவாக இருக்கலாம் இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு உங்கள் சம்பளத்தின் பக்கத்தில் இன்னும் ஒரு ஜீரோ இருக்கும் என்று சொன்னார். அதேபோல் நடந்தது என்று பெருமையாக பேசி இருந்தார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.