சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சீனியர் வீரர் என்ற தகுதியை இழக்கும் விராட் கோலி.. வறுத்தெடுக்கும் ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள்

Sledging செய்வது கிரிக்கெட்டில் சுவாரசியத்தை ஏற்படுத்தும். ஆனால் விராட் கோலி போன்ற வீரர்களால் அது அருவருக்கத்தக்க செயலாக மாறிவிட்டது. ஒரு இளம் அறிமுக வீரிடம் போய் விராட் கோலி இவ்வளவு கீழ்த்தனமாக நடந்து கொண்டது தான் இப்பொழுது ஆஸ்திரேலியா ஊடகங்கள் பெரிதுபடுத்தி வருகின்றனர்.

விராட் கோலி செய்த தவறான செய்கையால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டியிலிருந்து 20 சதவீதம் அபராதம் விதித்து தண்டனை போட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் புதிதாக களமிறங்கிய வீரர் சாம் கோன்ஸ்டாஸ். போட்டியின் நடுவே விராட் கோலி அவரை இடித்தார்.

அந்த நிகழ்வை மீண்டும் ரீபிளே பண்ணி பார்க்கும் பொழுது விராட் கோலி வேண்டும் என்றே இப்படி செய்தது தெளிவாக தெரிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணியினரின் மொத்த கோபமும் விராட் கோலி பக்கம் திரும்பியது. பொதுவாக விராட் கோலி ஒரு ஆக்ரோஷமான வீரர் தான். எந்த அளவிற்கு திறமை இருக்கிறதோ அந்த அளவிற்கு அகங்காரமும் அவரிடம் இருக்கிறது.

ஏற்கனவே அவர் நடந்து கொள்ளும் விதத்தை பல முன்னால் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள். இப்பொழுது இது அவர்களுக்கு வெறும் வாய்க்கு மெல்வதற்கு அவல் கொடுத்தது போல் மாறியுள்ளது. மொத்தமாய் விராட் கோலியை வறுத்தெடுத்து வருகிறார்கள். அவர் நடந்து கொள்ளும் விதமும் அப்படித்தான் இருக்கிறது.

மார்க் வாக், ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் விராட் கோலிக்கு அளித்த தண்டனை போதாது. அவருக்கு போட்டியில் விளையாட தடை விதிக்க வேண்டும். 70% அபராதம் அளித்திருக்க வேண்டும். இப்படி செய்தால் தான் மற்ற வீரர்கள் இவரை போல் களத்தில் வீரர்களுடன் உடல் ரீதியாக மோதாமல் இருப்பார்கள் என அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்கள்.

Trending News