Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

பாக்ஸ் ஆபீஸை அதிரவைக்க வரும்‘ஆட்டோ ஜானி’..2027 சங்கராந்தி ரேஸில் கெத்தாக இறங்கிய மெகாஸ்டார்!

பாக்ஸ் ஆபீஸை அதிரவைக்க வரும்‘ஆட்டோ ஜானி’..2027 சங்கராந்தி ரேஸில் கெத்தாக இறங்கிய மெகாஸ்டார்!

டோலிவுட்டின் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘KAAKA’. இப்படத்தின் வெளியீடு எப்போது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை சிரஞ்சீவியே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி,‘KAAKA’ படம் 2027 ஜனவரி 13ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருப்பது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, படத்தில் ஆட்டோ ஜானியாக மீண்டும் ஒரு புதிய டைமென்சனில் ரசிகர்களை மகிழ்விக்க இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, ‘ஆட்டோ ஜானி’ கேரக்டரின்ன் புதிய கெட்டப்பில் ரசிகர்களைச் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


இப்படத்தை இயக்குநர் பாபி கொல்லி இயக்கி வருகிறார்.சிரஞ்சீவியின் பதிவுக்குப் பதிலளித்த டைரக்டர் பாபி கொல்லியும்,ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அனுபவம் காத்திருப்பதாகத் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


ஏற்கனவே சிரஞ்சீவியின் அதிரடியான கேரக்டர்களுக்கும்,மாஸ் நடிப்புக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில், ‘KAAKA’ படத்தில் அவர் எந்த மாதிரியான கெட்டப்பில் வரப்போகிறார் ?என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக சங்கராந்தி விடுமுறையை இலக்காகக் கொண்டு வெளியாகும் இப்படம்,2027ஆம் ஆண்டின் முக்கியமான டோலிவுட் பட ரிலீஸ்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.