Ayalaan vs Captain Miller: ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பொங்கல் ரிலீஸ் கூத்தாடி ரெண்டு பட்டா ஊருக்கே கொண்டாட்டம் என்று ஆகி இருக்கிறது. ஏற்கனவே தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே பல வருடங்களாக பனி போர் நடந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதை காட்டு தீயாக மாற்றும் வகையில் இந்த வருட பொங்கலுக்கு தங்களுடைய படங்களை மோதவிட்டு இருக்கிறார்கள் இந்த ஹீரோக்கள்.
சிவகார்த்திகேயனின் அயலான் படம் கிட்டத்தட்ட அந்த பட குழுவின் ஐந்து வருட கடின உழைப்பு. ஏற்கனவே இன்று நேற்று நாளை என்னும் படத்தை இயக்கி வெற்றி பெற்ற இயக்குனர் ஆர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவும் அதிகமாக இருந்தது. வழக்கம் போல நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பங்கள் கொண்டாடும் படத்தை கொடுத்து விட்டார் என்பது உறுதியாக தெரிகிறது.
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக தீவிர தயாரிப்பு பணியில் இருக்கும் போது சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. படம் ரிலீசுக்கு பிறகு பார்த்தால் ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் கூட்டம் தான் விரும்பி பார்க்கும் அளவுக்கு இருப்பதாக நேற்று வெளியான நிறைய விமர்சனங்கள் சொல்லி இருந்தன.
அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் திரையிட இருப்பதால் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய லால் சலாம் படம் இந்த பொங்கல் ரேஸில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்து இருந்தார். அதே நேரத்தில் விஜய் சேதுபதி நடித்த மேரி கிறிஸ்மஸ் மற்றும் அருண் விஜய் நடிப்பில் உருவான மிஷன் என்ற இரண்டு படங்கள் இந்த ரேசில் வெளியாகி, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை ஒப்பிடும் பொழுது எடுபடாமல் போய்விட்டது.
வசூலில் ஜெயிச்ச சிங்கம்
சிவகார்த்திகேயனின் அயலான் படம் நேற்று ஒரு நாளில் பத்து முதல் 13 கோடி வசூல் செய்திருக்கிறது. அந்த படத்தை ஒப்பிடும் பொழுது தனுஷின் கேப்டன் மில்லர் படம் 14 முதல் 17 கோடி வசூல் செய்திருக்கிறது. முதல் நாள் அடிப்படையில் பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயனின் படத்தை விட தனுஷ் படம் சில கோடிகளில் முதலிடத்தில் இருக்கிறது.
அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் சரிசமமாக 450 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இதில் இன்று அயலான் படத்திற்கு தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டதாகவும், கேப்டன் மில்லர் படத்திற்கு 80 சதவீத தியேட்டர்கள்தான் ஹவுஸ் ஃபுல் ஆகி இருப்பதாகவும் தெரிகிறது. பொங்கல் விடுமுறை எல்லாம் தொடர்ந்து இன்னும் பத்து நாட்களில் இந்த பொங்கல் ரேஸில் ஜெயித்தது யார் என தெரிந்துவிடும்.
Also Read:Ayalaan Movie Review – சர்க்கரைப் பொங்கலாக தித்திக்கும் சிவகார்த்திகேயனின் அயலான்.. முழு விமர்சனம்