சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பாக்ஸ் ஆபிஸில் அயலானை ஓட விட்டதா கேப்டன் மில்லர்.? முதல் 3 நாள் கலெக்சன் ரிப்போர்ட்

Ayalaan VS Captain Miller first three day collection details: போன வருஷம் பொங்கலுக்கு விஜய், அஜித் இருவரின் வாரிசு, துணிவு படங்கள் திரையரங்கை ரணகளம் செய்தது போல, இந்த வருஷ பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படம் தரமான சம்பவத்தை செய்து கொண்டிருக்கிறது. அதிலும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படங்களின் வசூல் முதல் நாளிலிருந்து கணிசமாக உயர்கிறது.

பொங்கல் ரேஸ் செம்மையா சூடு பிடித்துள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் பீரியாடிக் ஜானரில் பக்க ஆக்சன் படமாக உருவாகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம், கடந்த 12ம் தேதி ரிலீஸ் ஆனது. அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் கான்செப்ட் எடுக்கப்பட்ட அயலான் படமும் ரிலீஸ் ஆனது.

முதல் நாளில் தரமான ஓப்பனிங் கேப்டன் மில்லருக்கு தான் கிடைத்தது. தமிழகத்தில் மட்டும் கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் 7.5 கோடியையும், உலகளவில் 14.20 கோடியையும் வசூலித்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் தமிழகத்தில் 13.5 கோடியும், உலகம் முழுவதும் 26.19 கோடியையும் வசூலித்தது.

Also Read: பொங்கல் ரேஸில் வென்றது யார்? கேப்டன் மில்லர், அயலானின் 2ம் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

அயலான் VS கேப்டன் மில்லர்- முதல் மூன்று நாள் வசூல் விபரம்

மூன்றாவது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை பொங்கலுக்கு திரளான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்ததால், தமிழகத்தில் மட்டும் 19.5 கோடியை கேப்டன் மில்லர் வசூலித்தது, உலகம் முழுவதும் 36.3 கோடி கிடைத்தது. ஒட்டுமொத்தமாக முதல் மூன்று நாட்களில் தனுஷின் கேப்டன் மில்லர் 76.72 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்து மிரட்டி உள்ளது. இன்னும் ஒரு சில தினத்தில் 100 கோடியை எட்டி விடும்.

அதேபோல் அயலான் படமும் முதல் நாளில் தமிழகத்தில் 4 கோடியும், சர்வதேச அளவில் 9 கோடியையும் வசூலித்தது. இரண்டாவது நாளில் தமிழகத்தில் 7.5 கோடியையும் உலக அளவில் 16.86 கோடியும் கிடைத்தது. மூன்றாவது நாள் நேற்று குடும்ப ஆடியன்சை தன்வசம் ஈர்த்த அயலான் தமிழகத்தில் மட்டும் 13 கோடியை வசூலித்தது, உலக அளவில் 25.30 கோடி அயலான் திரைப்படத்திற்கு கிடைத்தது. ஒட்டுமொத்தமாக முதல் மூன்று நாட்களில் அயலான் படம் 51.16 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்துள்ளது.

அயலான் படத்தின் வசூலை வைத்து ஒப்பிட்டு பார்க்கும்போது, கிட்டத்தட்ட 25 கோடி அதிக வசூல் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு கிடைக்கிறது. அப்படி என்றால் இந்த வருஷ பொங்கல் தனுஷ் உடையது தான். எப்படியோ சிஷ்யன் குரு தோற்றுப் போகவில்லை.

Also Read: அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டது அயலானுக்கா? கேப்டன் மில்லருக்கா.? இணையத்தை பரபரப்பாக்கும் ரிப்போர்ட்

- Advertisement -spot_img

Trending News