Ayalaan Overtook Captain Miller: இந்த வருட பொங்கல் ரேஸில் கேப்டன் மில்லர், அயலான் களம் இறங்குகிறது. ஏற்கனவே தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரின் தொழில் போட்டி உச்சநிலையில் இருக்கிறது. இதில் நேருக்கு நேர் மோதும் இவர்களின் படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.
அதில் அயலான் கடந்த சில வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு தற்போது வெளியாகிறது. அதனாலேயே படத்தின் பிரமோஷனும் பயங்கரமாக இருக்கிறது. இந்த சூழலில் அயலான், கேப்டன் மில்லரை முந்தி இருப்பது மீடியாக்களின் கவனத்தை திருப்பி இருக்கிறது.
அதாவது கேப்டன் மில்லரின் தமிழக தியேட்டர் உரிமம் 25 கோடி ஆகும். ஆனால் அதை ஓவர் டேக் செய்யும் வகையில் அயலான் படத்தின் தியேட்டர் உரிமம் 40 கோடியாக இருக்கிறது. இதிலிருந்து அயலானுக்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது தெரிகிறது.
இதனால் படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பெற்றிருக்கும் PhantomFX Studios பயங்கர குஷியில் இருக்கிறார்களாம். அயலான் படத்தின் VFX வேலைகளை இவர்கள்தான் பார்த்தார்கள். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளரால் அவர்களுக்கான பில்லை செலுத்த முடியாத நிலையில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து இப்போது ஓவர்சீஸ் உரிமையையும் கொடுத்திருக்கின்றனர். தற்போது தமிழக தியேட்டர் உரிமை வேற லெவலில் இருப்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனம் நிச்சயம் நமக்கு ஜாக்பாட் தான் என்ற குஷியில் இருக்கிறார்களாம்.
ஆக மொத்தம் இந்த பொங்கல் ரேசுக்காக அயலான் நாலு கால் பாய்ச்சலில் தயாராகியுள்ளது. இதற்கு ஈடு செய்யும் வகையில் கேப்டன் மில்லரும் வெறித்தனமாக இருக்கப் போகிறது. இதில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.
Also read: அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. அதிக லாபத்திற்கு போட்ட ஸ்கெட்ச்