புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடுத்த டெக்னாலஜி சர்ப்ரைஸ் கொடுக்கும் உலகநாயகன்.. ஆண்டவரை கையெடுத்து கும்பிடும் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் ஜூன் 3ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு கமலின் நடிப்பில் திரைப்படம் வெளியாக இருப்பதால் அவரின் ரசிகர்கள் இப்படத்தைக் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே இப்படம் குறித்த பல அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதில் லேட்டஸ்டாக விக்ரம் படத்தில் செய்துள்ள சில புது டெக்னாலஜிகள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாக கமல் நடிக்கும் படங்களில் எல்லாம் தமிழ் சினிமா கண்டிராத பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான பழைய விக்ரம் திரைப்படத்திலும் சயின்ஸ் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை நாம் வியக்கும் வகையில் கொடுத்திருந்தார்.

அதேபோன்று இப்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படத்தில் கமல் டி ஏஜிங் சம்பந்தப்பட்ட டெக்னாலஜியை பயன்படுத்தி இருக்கிறாராம். இதைப் பார்த்து மெர்சலான லோகேஷ் ஆண்டவரே நீங்கள் தான் ஒரிஜினல் என கையெடுத்து கும்பிட்டு வருகிறாராம். கதைப்படி இந்த படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் இதற்கு முந்தைய விக்ரம் திரைப்படத்தில் இருப்பதுபோல் கமல் மிகவும் இளமையாக வர இருக்கிறாராம்.

இதற்காக ஐரிஷ்மேன் உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜியை இதில் பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் கமல் 80 களில் நாம் பார்த்து ரசித்த தோற்றத்தில் இருக்கப் போகிறார் என்று தெரிகிறது.

இது நிச்சயம் அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே படம் சம்பந்தப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.

Trending News