வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என் முதல் படத்தைப் பார்த்துட்டு பாரதிராஜா கூறிய விமர்சனம்.. பாட்ஷா பட இயக்குனர் பகிர்ந்து சுவாரஸ்யம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனை வைத்து பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் இயக்குனர் ஒருவர். அதுமட்டுமின்றி இவர் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் சூப்பர் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவை அசத்தி உள்ளார்.

அதில் கமலை வைத்து எடுத்த முதல் படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. 1988-ல் கமல் நடிப்பில் வெளியான சத்யா திரைப்படம் உலக நாயகனின் சினிமா கொரியரில் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது. மேலும் இதில் கமலுடன் அமலா, ராஜேஷ், நாசர், வடிவக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

Also Read: பதுங்கியிருக்கும் புலி.. பொன்னியின் செல்வனால் சரியான திட்டம் தீட்டி காத்திருக்கும் பாரதிராஜா

மேலும் 80-களின் இறுதியில் ரொமான்டிக் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த கமலஹாசனை புது முக இயக்குனரான இவர்தான், அதிரடி ஆக்சன் ஹீரோவாக காட்டினார். இதனால் இந்த படம் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த கமலுக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் ஆக அமைந்தது.

இதுதான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு முதல் படம். இந்தப் படத்தை பார்த்தால் அவர் ஒரு புது இயக்குனர் என்பது தெரியவே தெரியாது. அந்த அளவிற்கு இந்த படத்தை அற்புதமாக இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.

Also Read: மீண்டும் படத்தை இயக்கி விட்டு தான் நான் சினிமாவை விட்டு செல்வேன்’ உறுதியாக இருக்கும் பாரதிராஜா.. கைகோர்த்த வாரிசுகள்!

அப்போது இயக்குனராக உச்சத்தில் இருந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, சத்யா படத்தை பார்த்து மிரண்டு போய், திரைக்கு அறிமுகமான புத்தம் புது இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து கட்டிப்பிடித்து பாராட்டி உள்ளார்.

சத்யா படத்தை பார்த்த பிறகு, ‘இப்படி ஒரு படமா!’ என்று பாரதிராஜா கட்டிப்பிடித்து பாராட்டியதை சுரேஷ் கிருஷ்ணா இப்போது, அவரின் முதல் படத்தில் நடந்த சுவாரசியமான அனுபவம் என்று பகிர்ந்திருக்கிறார். மேலும் சத்யா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா, வீரா, அண்ணாமலை போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா.

Also Read: 16 வயதினிலே படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம்.. கடைசி வரை ஏமாற்றிய பாரதிராஜா

Trending News