ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சொல் புத்தியும் இல்ல, சுய புத்தியும் இல்ல.. பாபர் அசாமை மூளை இல்லாத கேப்டன் என சாடிய 2 ஜாம்பவான்கள்

ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணி வெளியேறப்போவது உறுதியாகிவிட்டது. அவர்கள் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் அணிக்குள் பல்வேறு விதமான சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

எப்போதுமே சர்ச்சைகளுக்கு பெயர் போனது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் நாட்டில் அவர்களுக்கு கிடைக்கும் சலுகை மிகவும் குறைவு. சமீபத்தில் கூட சாஹீன் அஃப்ரிடி மருத்துவ செலவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு காசு அனுப்புவதில் பிரச்சினை ஏற்பட்டது.

Also Read : இந்திய அணியில் 6 இடத்திற்கு பிரச்சனை.. முட்டி மோதிக்கொள்ளும் 2 தமிழர்கள்

இதை அவரது மாமனாரான சாகித் அப்ரிடி பகிரங்கமாக போட்டுடைத்தார். எனது மருமகன் சாஹீன் அஃப்ரிடி பாகிஸ்தான் அணிக்காக விளையாடி, காயம் ஏற்பட்டபோதிலும் கூட அவர்கள் மருத்துவ செலவிற்கு பணம் தரவில்லை என குற்றம் சாட்டினார். இப்படி அவர்கள் அணிக்குள் ஒற்றுமையை கிடையாது.

சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார். அவர் அணியில் பல வேறுபாடுகள் பார்க்கிறார். மேலும் அணிக்காக விளையாடுவதை தவிர்த்து தன் சொந்த ரெக்கார்டுகளுக்காக விளையாடி வருகிறார் என பாகிஸ்தான் நாட் டினர் அவரை குற்றம் சாட்டி வருகின்றனர்.

Also Read : இந்திய அணியில் இணையும் 2 தமிழர்கள்.. அதிலும் இந்த வீரர் சிக்ஸ் மட்டும்தான் அடிப்பாராம்

பாகிஸ்தானின் ஜாம்பவான்களாகிய சோயப் அக்தர் மற்றும் வாசிம் அக்ரம் இருவரும் பாபர் அசாமிற்கு எதிரான பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். வாசிம் அக்ரம் தான் ஒருமுறை உள்ளூர் போட்டிக்கு பயிற்சியாளராக இருந்தபோது பாபர் அசாம் தன்னை மதிக்கவில்லை எனக் கூறியுள்ளார். எனக்கே இந்த நிலைமை என்றால் ,அணியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு என்ன நிலைமை என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

மேலும் அவரை நடுவரிசை வீரராக களமிறங்க அறிவுரை கூறியதாகவும் அவர் நான் ஓபனிங் தான் விளையாடுவேன் இல்லையென்றால் விளையாட மாட்டேன் என்று திமிராக பேசியதாக அக்ரம் கூறினார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர்ரும், பாபர் அசாமிற்கு சொல் புத்தியும் கிடையாது செயல் புத்தியும் கிடையாது, பாபர் அசாம் ஒரு மூளை இல்லாத கேப்டன் என்று வெளிப்படையாக கூறினார்.

Also Read : இந்திய அணியின் பில்லர் ராகுல் டிராவிட்டை பற்றி இதுவரை அறியாத 12 சுவாரசியமான சம்பவங்கள்.!

Trending News