வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

திறமை இருந்தும் பூசணிக்காய் போல் உருவம்.. பேயாட்டமாடியும் அம்பத்தி ராயுடு போல் மோசமான ஆட்டிட்யூட்

இரண்டு வருடங்களாக இளம் வீரர் ஒருவர் எப்படியாவது இந்திய அணிக்குள் மீண்டும் திரும்பி விட வேண்டும் என்ற கனவு கோட்டை கட்டி வந்தார். ஆனால் அவருக்கு அது ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது. தொடர்ந்து தன்னுடைய திறமையை நிரூபித்த போதிலும் உடம்பில் இல்லாத பிட்னெஸ்ஸால் அவருக்கு இந்திய அணி தொடர்ந்து அல்வா கொடுத்து வருகிறது.

20 வயதில் அணிக்குள் வந்த இவர் அசாத்திய திறமை கொண்டவர். எதிரணி பவுலர்களை அடித்து விளையாடுவதில் இவர் அடுத்த சேவாக் என்ற பெயர் எடுத்தார். வந்த வேகத்திலேயே இந்திய அணியை விட்டு வெளியேறவும் செய்தார். இதற்கெல்லாம் காரணம் இவருடைய பிட்னஸ் மற்றும் இவருடைய ஆட்டிட்யூட் தான்.

23 வயதான பிரிதீவ் ஷா. 30 ரன்கள் அடித்தாலும் 15 பந்தில் அடித்து விடுவார். இவரது ஆட்டம் அப்படியே இந்திய அணியின் அதிரடி ஆட்டக்கார சேவாக்கை உரித்து வைத்தார் போல் இருக்கும். ஆனால் இவரிடம் பிட்னஸ் கிடையாது. ஒரு போட்டி விளையாடினால் அடுத்த போட்டியில் தசை பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.

இப்போது கூட இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டிங கிரிக்கெட்டில் 153 பந்துகளில் 244 ரன்கள் மற்றும் 76 பந்துகளில் 126 ரன்கள் என்று அதிரடி ஆட்டம் ஆடி அசர வைத்தார். இதனால் பிரித்வி ஷா மீண்டும் இந்திய அணிக்கு செலக்ட் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இப்படி அடிக்கடி காயம் காரணமாகவும், உடம்பில் தசை பிடிப்பு காரணமாகவும் தொடர்ந்து இவரால் விளையாட முடியாமல் ஆகிவிடும். அது மட்டும் இன்றி இவர் கொஞ்சம் பார்ப்பதற்கு குள்ளமாக இருப்பார் மேலும் கொஞ்சம் உடம்பு பூசணி போல் குண்டாக இருக்கும்.

ஏற்கனவே இவர் உடம்பை குறைத்து பிட்னஸ் காட்ட வேண்டும் என இவருக்கு ஆர்டர் போட்டனர். அதையும் ஒழுங்காக செய்யவில்லை. அது மட்டும் இன்றி இவருடைய ஆட்டிடியூடும் கொஞ்சம் மோசம் தான். எல்லாரிடமும் பிரச்சனை செய்வது என்று அம்பத்தி ராயுடு போல் அடிக்கடி பிரச்சனையில் சிக்கிக் கொள்வாராம்.

Trending News