சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

விலாசம் கேட்டு விக்னேஷ் சிவனையே துரத்தும் ஏழரை.. ஓவர் கெத்தால் புண்ணாகிய உடம்பு

LIC title issue for Director Vignesh shivan: போடா போடி மூலம் அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன் தனித்துவமான காதல் காமெடி கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எதார்த்தமான படங்களை கொடுப்பதில் வல்லவர்.  நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்றவை இவரின் படைப்புகள்.

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று கதறும் அளவிற்கு படம் தொடங்கப்படுவதற்கு முன்பிலிருந்து பிரச்சனைகள் ஒன்றின் மேல் ஒன்று  விலாசம் கேட்டு விக்னேஷ் சிவனை நெருங்கி வருகிறது. அனிருத் திசையில் காத்து வாக்குல ரெண்டு காதலுக்கு பின் விக்னேஷ் சிவன் கையில் எடுத்திருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் சுருக்கமாக எல்ஐசி.

முதலில் கமல் கூட்டணியில் இணைவதாக இருந்த விக்னேஷ் சிவன் நாயகனின் அதிர வைக்கும் சம்பளத்தால் கொஞ்சம் பின் வாங்கிப் போனார். இவர்கள் கூட்டணி ஒத்தி வைக்கப்பட்டது பின்பு இப்படத்திற்கான தயாரிப்பை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ  ஏற்றுக் கொண்டது.

Also read: நாலா பக்கமும் ஏழரை சனியால் முழிக்கும் விக்னேஷ் சிவன்.. டைட்டிலுக்கு போடும் சண்டை

லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி செட்டி மற்றும் எஸ் ஜே சூர்யா காம்பினேஷனில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கான பூஜை கடந்த வருடம் டிசம்பர் 15 நிகழ்ந்தது.  படத்தின் டைட்டிலை பார்த்த இயக்குனர் ஒருவர் இந்த டைட்டில் என்னுடையது  இதை உபயோகிக்கும் பட்சத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று தடாடியாக கூறினார்.

அவரை சமாதானப்படுத்தவும் முயலாமல் டைட்டிலை காசு கொடுத்து சொந்தமாக்கவும் செய்யாமல் அலட்சியமாக இருந்தார் விக்னேஷ் சிவன். அது அப்படி இருக்க போனஸ் ஆக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனமும்  இந்த டைட்டிலை பயன்படுத்துவதை நிறுத்த கோரி இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஏழு நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் சட்டரீதியாகவும் மற்றும் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப் போவதாக எச்சரித்து உள்ளது. இதை கண்டு கொள்வாரா அல்லது அலட்சியப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: பிரதீப்பின் 3 படங்களும் திருட்டு பிரச்சனை.. விக்னேஷ் சிவன் கூட்டணியிலும் தொடரும் பஞ்சாயத்து

Trending News