புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பத்த வச்ச கண்ணம்மா.. பற்றி எரியும் வெண்பா வீடு

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் ரோஹித்தின் குழந்தையை வயிற்றில் சுமந்தாலும் பாரதியை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற முடியுடன் இருக்கும் வெண்பா குடும்பத்தையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

அதைப் புரிந்து கொள்ளாத வெண்பாவின் அம்மா ஷர்மிளா, மகளின் திருமணத்திற்காக பத்திரிக்கை அடித்து ஊர் முழுவதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கண்ணம்மா வீட்டிற்கு பத்திரிக்கை வைப்பதற்காக சென்ற ஷர்மாவிடம் கண்ணம்மா வெண்பாவைப் பற்றி பத்த வைத்திருக்கிறார்.

Also Read: சாந்தி மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. ஜி பி முத்துவை விட இவ்வளவு அதிகமா?

ஏனென்றால் வெண்பா திடீரென்று நல்லவள் போல் கல்யாணத்திற்காக எல்லா விஷயத்திற்கும் வளைந்து கொடுத்து நாடகமாடுகிறார். அதுமட்டுமின்றி ரோஹித் மற்றும் ரோஹித் அம்மாவிடமும் கனிவுடனும் என்ன சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று வித்தியாசமாக நடந்து கொள்வதால் கண்ணம்மா சொல்வது சரியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஷர்மிளாவிற்கு வருகிறது.

இருப்பினும் ஏதேதோ சொல்லி சமாளித்த வெண்பா ஷர்மிளாவையும் நம்ப வைத்து விடுகிறார். மறுபுறம் திருமண மண்டபத்தில் இருந்து எஸ்கேப் பிளான் போட்ட வெண்பாவை கண்ணம்மா சரியாக புரிந்து வைத்து அவர் அப்படித்தான் செய்வார் என மாமியார் சௌந்தர்யாவிடம் சொல்கிறார்.

ALso Read: அதல பாதாளத்திற்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி.. போட்டியாளரிடம் கெஞ்சும் விஜய் டிவி

அதே போன்று வெண்பாவும் பாரதியுடன் மணக்கோலத்தில் எஸ்கேப் ஆகிறார். அந்த சமயம் வேறு வழி இல்லாமல் பாரதியும் வெண்பாவை அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்கிறார். இருப்பினும் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்த பிறகுதான் பாரதி வெண்பாவை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற முடிவை எடுக்கப் போகிறார்.

இதைப்பற்றி  வெண்பாவிடமே ரகசியமாக வைத்திருக்கிறார் பாரதி .இப்படி சீரியலில் லாஜிக்கே இல்லாமல் பார்ப்பவர்களை முட்டாளாக்கி கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

ALso Read: விவாகரத்து பெற்று தனியாக வாழும் விஜய் டிவியின் 5 பிரபலங்கள்.. ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்காத டிடி

Trending News