வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இருக்கும் இடம் தெரியாமல் போன பாலா பட முரட்டு வில்லன்.. முடங்கி போய் இருக்கும் விஷாலின் நண்பர்

Director Bala Movie Villain: இயக்குனர் பாலா எடுக்கக்கூடிய படத்தை பார்த்தால் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போய் எடுக்க கொஞ்சம் கூட அஞ்ச மாட்டார் என்பது போல் தெரியும். ஏனென்றால் அந்த அளவிற்கு நடிகர்களிடமிருந்து தத்ரூபமான நடிப்பை வாங்கக்கூடியவர். அதனாலேயே இவருடைய படத்தில் நடித்தால் வெற்றி நிச்சயம் என்று பல நடிகர்கள் நடிப்பதற்கு ஆசைப்படுவார்கள்.

அப்படி பாலா இயக்கத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் தான் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்கே சுரேஷ். நடிப்பதற்கு முன் தயாரிப்பாளராக மட்டுமே இருந்து வந்தார். அதன்பின் திரைக்கு அறிமுகமானது பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் தான். இப்படத்தில் இவருடைய முரட்டுத்தனமான நடிப்பை பார்த்து பலரும் இவரை வெறுத்து விட்டார்கள்.

ஏனென்றால் அந்த அளவிற்கு கொடூரமான நடிப்பை கொடுத்திருப்பார். இதனைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த மருது படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு விஷால் மற்றும் ஆர்கே சுரேஷ் நட்பு ரீதியாக பழகிவிட்டார்கள். அத்துடன் பில்லா பாண்டி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாமல் படுதோல்வி அடைந்து விட்டது.

Also read: பிப்ரவரி 9 ஓடிடியில் ரிலீஸாகும் 14 படங்கள்.. மீண்டும் மோதிக் கொள்ளும் தனுஷ், சிவகார்த்திகேயன்

அதன் பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சமுத்திரக்கனியின் நண்பராக நடித்திருக்கிறார். அடுத்ததாக தொடர்ந்து ஒரு சில படங்களிலும் இவருடைய நடிப்பை பார்க்க முடிந்தது. இப்படியே தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலோ அல்லது குணச்சித்திர கேரக்டருக்கும் வருவார் என்று எதிர்பார்த்தால் இன்னும் வரை இவரை தேடி எந்த ஒரு வாய்ப்புகளும் வரவில்லை.

அதனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பட வாய்ப்பு இல்லாமல் அப்படியே முடங்கி போய் இருக்கிறார். ஒருவேளை இப்ப வருகிற படங்களில் எல்லாம் வில்லன் கதாபாத்திரத்துக்கு பழைய முன்னணி நடிகர்களை கூப்பிட்டு நடிக்க வைப்பதால் என்னமோ இவருக்கு பெருசாக வாய்ப்புகள் வராமல் போய்விட்டது. இப்படியே போனால் பல வில்லன் நடிகர்களின் கெதியும் இதேதான் போல.

Also read: 5 வருஷமா வாய்ப்பில்லாமல் இருந்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. குடித்து மட்டை ஆனதால் வந்த ஆப்பு

Trending News