திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாலச்சந்தர் முதல் ஷங்கர் வரை.. சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர்களின் ஸ்பெஷாலிட்டி

கோலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த 6 இயக்குனர்களின் ஸ்பெஷல் பண்புகள் என்ன என்பது தெரியவந்துள்ளது. இதுதான் இவர்களின் வெற்றியின் ரகசியமாகவும் பார்க்கப்படுகிறது.

கே பாலச்சந்தர்: மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இவர், 1965 ஆம் ஆண்டு நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல் என வரிசையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

அதிலும் கோலிவுட்டின் ஜாம்பவான்களாக இருக்கும் கமல், ரஜினியை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். இவரின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவருடைய பஞ்சுவாலிட்டி தான். படப்பிடிப்பு தளத்திற்கு யாராவது லேட் ஆக வந்தால் அவர்களை உள்ளே நுழைய விடாமல் அப்படியே திரும்பி அனுப்பி விடுவாராம்.

Also Read: கே பாலச்சந்தர் இயக்கத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 படங்கள்.. நகைச்சுவையிலும் ஒரு தத்துவம்

மகேந்திரன்: மென்மையான உணர்வுகளுடன் அழகுணர்ச்சி மிகுந்த காட்சி அமைப்பினால் தமிழ் சினிமாவில் உன்னத படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் மகேந்திரன். இவருடைய இயக்கத்தில் வெளியான உதிரிப்பூக்கள் தமிழ் திரையுலக வளையல் ஆற்றின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்படி கோலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்த மகேந்திரன் செம டென்ஷன் பார்ட்டி. இவருடைய டென்ஷன் தான் அவருக்கு பலம். தன்னுடைய வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பயங்கர டென்ஷன் ஆகுவாராம்.

பாரதிராஜா: தமிழ் சினிமாவில் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா என புது புது கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் மண் மணம் மாறாத கிராமத்துப் பின்னணி கதைக்களத்தை கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குனர் பாரதிராஜா. மிகவும் அன்பானவர், எளிதாக கோபம் படக்கூடிய கேரக்டர் தான் பாரதிராஜாவின் சிறப்பு பண்பு.

Also Read: கே பாலச்சந்தர் பட்டையை கிளப்பிய 5 படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரஜினி

மணிரத்னம்: கே பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம், ஒட்டுமொத்த திரையுலகையும் கோலிவுட் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மணிரத்னம். இவருடைய வெற்றிக்கு காரணம் அவருடைய கொள்கை தான். சோறு தண்ணி இல்லாமல் வேலையை வாங்கும் ஒரு ஸ்டிட் ஆபிஸர். வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்துவிட்டு தான் வெளியேற வேண்டும் என்பது இவரது கொள்கை.

கேஎஸ் ரவிக்குமார்: விக்ரமனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த இவர், அதன்பின் ரகுமான் நடிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படி 90களில் வரிசையாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கேஎஸ் ரவிக்குமார், அவருடைய படங்களில் எல்லாம் ஒரு நிமிடமாவது வந்து சென்று விடுவார். இவர் எல்லாவற்றையும் நீட்டாக செய்ய வேண்டும் எதிலும் எந்த குறையும் இருக்கக் கூடாது என்பதுதான் அவருடைய பாலிசி. அதுவே அவருடைய வெற்றியின் ரகசியமாக பார்க்கப்படுகிறது.

Also Read: ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஹீரோயின்.. 46 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்

ஷங்கர்: பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாத படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக விளங்கும் இவர், தற்போது கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இவரின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் யாரை எப்படி வேலை வாங்க வேண்டும் என்று இவருக்கு அத்துபடி.

இவ்வாறு கோலிவுட்டின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த 6 இயக்குனர்களும் தங்களுக்கென இருக்கும் சிறப்பு பண்பினால் தான் உச்சத்தை அடைந்திருக்கின்றனர். ஆகையால் இவர்களுடைய ஸ்பெஷாலிட்டி என்ன ரசிகர்களும் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

Trending News