ஐசிசி நடத்தும் 2025ஆம் வருட சாம்பியன் டிராபி போட்டிகள் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாய் நாட்டில் நடக்க இருக்கிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தானும் மோத உள்ளது. இந்தியா தன்னுடைய முதலாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
பிப்ரவரி 19 இல் இருந்து மார்ச் 9 ஆம் தேதி வரை மொத்தமாய் இந்த தொடரில் 15 போட்டிகள் நடக்க உள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்து மொத்தம் எட்டு அணிகள் இந்த தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகளோடு இரண்டு அரை இறுதி போட்டி நடக்கும்.
மார்ச் 4 மற்றும் 5 தேதிகளில் அரை இறுதி போட்டிகள் நடக்க உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்தான் இந்தத் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள். ஆனால் இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் இல்லாததால் இந்த தொடர் சற்று சவாலாக அமைந்துள்ளது.
இந்த தொடரில் பங்குபெறும் இந்திய அணியை பொருத்தவரை பேட்டிங் யூனிட்டில் வலுவாக இருந்தாலும் பவுலிங் சற்று பின்தங்கி தான் உள்ளது. நட்சத்திர பவுலர் பும்ரா பேக் இஞ்சூரி காரணமாக இந்த தொடரில் பங்கு பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயத்தால் இன்னும் 3 மாதம் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இதனால் முதல் போட்டியில் இந்தியா மோதவிருக்கும் பங்களாதேஷ் அணி வாய்ச்சவடால் விட்டு வருகிறது. , பும்ரா இல்லாத அணியை நாங்கள் எளிதில் வீழ்த்துவோம். அவர்தான் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். எங்க வீரர்கள் மற்ற பவுலர்களை பந்தாடி விடுவார்கள் என அந்நாட்டு வீரர்கள் பேசி வருகிறார்கள்.