Not Interested Test Matches: கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலும் குறுகிய வடிவிலான போட்டிகளையே காண்பதற்கு இப்பொழுது பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். உதாரணமாக 60 ஓவர்களில் நடைபெற்ற போட்டி 50 ஓவர்களாக மாற்றப்பட்டது. இப்பொழுது இருபது ஓவர் போட்டிகளுக்கு அதிக அளவு ரெஸ்பான்ஸ் கொடுத்து வருகின்றனர்.
இந்த வகை போட்டிகளுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் 5 நாட்கள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வருங்கால சங்கதி தொடருமா என்பது பெரிய கேள்விக்குறி தான். ஒவ்வொரு நாடுகளும் டெஸ்ட் போட்டிகளை மேம்படுத்த பல மாறுதல்களை கொண்டு வருகிறது.
சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டது. அந்த வகையில் டெஸ்ட் போட்டிகள் முதன்முதலாக பகல் இரவு போட்டிகளாகவும் நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி வெள்ளை நிற பந்துகள் மட்டுமின்றி பிங்க் நிற பந்துகளிலும் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
Also Read: கிரிக்கெட்டில் நடந்த 5 அருவருப்பான சம்பவம்.. இந்திய அணியை கெடுத்து குட்டிச்சுவராக்கிய அசாருதீன்
அப்படி சமீபத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியுடனும் பங்களாதேஷ் அணியுடனும் விளையாடியது. பகல் இரவு போட்டிகளாகவும் , பிங்க் நிற பந்துகளை வைத்தும் இந்த தொடர் நடத்தப்பட்டது. ஆனால் இப்படி நடத்தப்பட்ட போட்டிகளுக்கும் ஆதரவு இல்லை.
இப்படி சுவாரசியம் இல்லாத போட்டிகளை இந்தியா தொடர்ந்து நடத்துமா என்று பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா இடம் கேட்கப்பட்டது. அதற்கு இத்தகைய போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் இந்த போட்டிகள் மூன்று நாட்களில் முடிந்து விடுகிறது. ரசிகர்கள் இத்தகைய போட்டிகளை பார்த்து பழகிய பிறகு தான் இது ரசிக்கும்படி இருக்கும்.
மக்களிடையே நல்ல ஒரு புரிதலும், ரசிப்பு தன்மையும் வந்த பிறகு தான் இனிமேல் பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடக்கும். இதைப்பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு இடம் பேசிய பிறகு இனி பகல், இரவு டெஸ்ட் போட்டி நடத்தலாமா, வேண்டாமா என்ற முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தலைவர் கூறியுள்ளார்.