சீனியர் வீரர்களாகிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இதனால் இந்திய அணிக்கு அடுத்த டி20 கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. அஜித் அகார்க்கர் மற்றும் கௌதம் கம்பீர் இப்பொழுது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.
அடுத்து வரவிருக்கும் இலங்கை அணிக்கு எதிராக மூன்று இருபது ஓவர் போட்டி மற்றும் மூன்று 50 போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கு அணியை தேர்ந்தெடுக்கும் விதமாக பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வு குழு யோசித்து வருகிறது. அணியை தேர்ந்தெடுத்தாலும் வழி நடத்தும் கேப்டன் யார் என்பது தான் இப்பொழுது சிக்கலாக அமைந்துள்ளது.
2026 டி20 உலக கோப்பை இந்திய மண்ணில் நடக்கிறது அதனால் இப்போதிலிருந்தே இந்திய அணியை உருவாக்கும் பொறுப்பு கௌதம் கம்பிருக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று யோசித்து வருகிறார் புது பயிற்சியாளர் கம்பீர்.
அனுபவம் வாய்ந்த கே எல் ராகுல் 20 ஓவர் போட்டியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஹர்திக் பாண்டியா அடுத்த கேப்டன் என பிசிசிஐ ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளது.இதற்கும் இப்பொழுது கௌதம் கம்பீர் செக் வைத்துள்ளார்.
விட்டுக் கொடுக்காமல் பிரச்சனையை கிளப்பும் காம்பீர்
ஹார்திக் பாண்டியாவிற்கு போதிய அனுபவம் இருந்தாலும் கூட அவருடைய உடல் தகுதி சற்று கேள்விக்குறியாக இருக்கிறது. தொடர்ந்து அணியில் இடம் பிடித்து விளையாடுவது அவருக்கு சற்று சிரமமாய் இருக்கிறது. இதனால் சூரியகுமார் யாதவ் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய அணியை 16 டி20 போட்டிகளிலும், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வழி நடத்தியுள்ளார் பாண்டியா. ஆனால் அவர் உடற்தகுதியை நிரூபித்து தொடர்ந்த அணியில் இடம்பெற்று விளையாடினால் தான் கேப்டன் பொறுப்பை கொடுக்க முடியும் என கௌதம் கம்பீர் பொற்கொடி பிடிக்கிறார்.
- ஹர்திக் பாண்டியா இடத்திற்கு ஆப்பு வைத்த தோனியின் ஏகே 47
- ஆதரவில்லாமல் டம்மியாகும் ஹர்திக் பாண்டியா
- 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பு அசுரபலம் எடுக்கும் அணி