புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் பிசிசிஐ.. T20 உலக கோப்பையில் நினைவுக்கு வராத ஹிட் மேனின் தியாகம்

இந்திய அணியின் கேப்டனும் மூத்த வீரனுமான ரோஹித் சர்மா இப்பொழுது பார்ம் அவுட் பிரச்சனை காரணமாக திணறிவருகிறார். இதற்கெல்லாம் காரணம் ஆஸ்திரேலியா டூர் தான். அங்கே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட சோபிக்கவில்லை.

மற்றொரு மூத்தவிரான விராட் கோலி தன் பங்கேற்கு ஒரே ஒரு சதம் மட்டும் அடித்து பெயரை காப்பாற்றிக் கொண்டார். ரோஹித் சர்மா மட்டுமில்லாமல் அனைத்து வீரர்களும் மோசமாக விளையாடிய போதிலும், அணித்தலைவராக பதில் சொல்லும் இடத்தில் ரோகித் இருக்கிறார்.

ரோகித் சர்மாவின் மோசமான பார்ம் காரணமாக அவரை டெஸ்ட் போட்டியில் இருந்து நிரந்தர ஓய்வு பெறுமாறு கூறி வருகிறார்கள். இந்த தொடரில் மொத்தமாய் சொதப்பிய அவரை பல வீரர்கள் மோசமான முறையில் சித்தரித்து வருகிறார்கள். ஏற்கனவே ரோகித் சர்மா 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.

கடைசியாக இந்தியா விளையாடிய T20 உலக கோப்பையை வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா தான். அதில் சுயநலம் பார்க்காமல் அனைத்து வீரர்களுக்கும் முன் உதாரணமாய் செயல்பட்டவர் ரோகித். மூன்று ஓவர்கள் களத்தில் நின்றாலும் ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்துக் அணியை நல்ல நிலைமையில் விட்டு செல்வார்.

கொஞ்சம் கூட அவர் திறமையை கண்டு கொள்ளாமல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடைந்த படுதோல்வியால் மட்டுமே பிசிசிஐ ரோகித் மீது அதிருப்தியில் இருக்கிறது.இதனால் இந்திய அணி நாடு திரும்பிய பின் மொத்தமாய் களையெடுக்க காத்திருக்கிறது . ரோஹித் சர்மாவிற்கு இனிமேல் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்.

Trending News