தன்னை வைத்து முன்னர் இயக்கி வெற்றி படம் கொடுத்த இயக்குனருக்கு நடிகர்கள் மீண்டும் அவர்கள் துவண்டு போய் இருக்கும் நேரத்தில் தங்களுடைய ஆஸ்தான நடிகரின் படங்கள் வெளியாகும் போது அதனை ரசிகர்கள் பல்வேறு வகையில் கொண்டாடுவது தென்னிந்திய திரை ரசிகர்களின் வழக்கம்.
அந்த கொண்டாட்டங்களின் போது வேறு நடிகரின் ரசிகர்களின் கொண்டாட்டங்களை காட்டிலும் தாங்கள் பெரிதாக செய்திட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். சன் பிக்ச்சர் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட்.
கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி திரை அரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. அந்த படத்தின் டிரெய்லர் சென்று 2 ஆம் தேதி வெளியானது. விஜய் ரா ஏஜெண்டாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஒரு மாலில் நுழையும் தீவிரவாத கும்பலை அங்கு உள்ள விஜய் எப்படி கையாளுகிறார் என்பதே படத்தின் கதை.
ஆக்ஷனில் விஜய் புகுந்து அதோகலம் செய்துள்ள இந்த ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் கண்மூடித்தனமான அபிமானத்தில் சிலர் தங்களுக்கு சாதகமாகவும் தவறாகவும் பயன்படுத்தி கொள்கின்றனர். டீஸர், ட்ரைலர் முதற்கொண்டு நடிகர்கள் பிறந்த நாட்களில் பழைய படங்களை திரையிட்டு பணம் பார்க்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
மதுரையில் உள்ள ஒரு திரை அரங்கில் படத்தின் ட்ரைலரை காண்பிக்க திரையரங்கு டிக்கெட் விநியோகித்து டிரெய்லர் ஷோ மட்டும் நடத்தியுள்ளது. அதற்கு ஒரு டிக்கெட் 50 ரூபாய் என்னும் கணக்கில் 3 டிக்கெட்கள்- 150 ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்’ஐ ஒரு ரசிகர் பதிவிட அதனை சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது மாதிரியான கொண்டாட்டங்கள் தவறானவை, நடிகனை திரையில் மட்டும் கொண்டாட வேண்டுமே தவிர, அதற்காக ரசிகர்கள் பெரும் பணத்தை போஸ்டர் அடிப்பதிலும், கட் அவுட் வைப்பதிலும்,அதற்கு பால் அபிஷேகம் செய்வதும் என இருப்பது தவறான போக்கு என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.