பீஸ்ட் படம் கூர்க்கா பட கதைதானே.. அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் டிரென்டிங் நம்பர் 1 என்ற இடத்தை பீஸ்ட் ட்ரெய்லர் பிடித்துள்ளது. வெகு நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த ட்ரெய்லர் கொடுத்திருக்கிறது. நடிகர் விஜய், யோகிபாபு, செல்வராகவன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளனர்.

பொதுவாக ஒரு ட்ரெய்லர் வந்தால் இணையத்தில் நெட்டிசன்கள் ட்ரோல்கள், மீம்ஸ்கள் என பல பல கமெண்ட்களை போஸ்ட் செய்வார்கள். சமீபத்தில் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தையும் நெட்டிசன்கள் தமிழில் வெளியான மெட்ரோ திரைப்படம் போல் உள்ளது என்று  கலாய்த்து தள்ளினர். அதன் பின்னர் மெட்ரோ திரைப்படத்தின் இயக்குனரும் வலிமை திரைப்படத்தின் கதை மீது வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை கலாய்க்கும் பணியில் நெட்டிசன்கள் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் இந்த படத்தின் ட்ரைலரில், ஒரு மாலில் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து துப்பாக்கிகளை வைத்து ஹைஜாக் செய்யும் தீவிரவாதிகளிடமிருந்து மாலில் சிறைப்பிடிக்கப்பட்ட பொதுமக்களை விஜய் காப்பாற்றப் போராடும் வகையில் இந்த ட்ரெய்லர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஹீ ஈஸ் த ஃபிரீக்கிங் பீஸ்ட் என்ற செல்வராகவனின் வசனங்களும், மீனர், லீனர், ஸ்ட்ராங்கர் கேன் யூ ஃபீல் த பவர்?  டெரர்.. என்ற அனிருத்தின் இசைக்கேற்ப கருப்பு கோட் அணிந்து கெத்தாக கோடாரியை தன் கைகளில் வைத்துக்கொண்டு நடைபோடும் விஜயின் காட்சி பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

பயமா இருக்கா, இனிமே பயங்கரமா இருக்கும் என்கிற விஜய்யின் வசனங்களும் தெறிக்க விட்டிருக்கின்றன. இந்தநிலையில் இந்த திரைப்படத்தை ஏற்கனவே தமிழில் வெளியான ஒரு திரைப்படத்தின் காட்சியை போலவே உள்ளதாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு தள்ளியுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்த கூர்க்கா திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் போல உள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

யோகி பாபு ஹீரோவாக நடித்த அந்தத் திரைப்படத்திலும் ஒரு மாலில் தீவிரவாதிகள் பொதுமக்களை துப்பாக்கி முனையில் கடத்தி வைத்துவிட்டு அவர்களின் தேவையை கொடுத்தால் மட்டுமே அவர்களை விடுவிப்பதாக கூறுவர். அதேபோலவே பீஸ்ட் படத்தின் ட்ரைலரும் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இணையத்தில் வெளியான பிரபல மனிஹெய்ஸ்ட் சீரிஸில் இடம்பெற்ற சில காட்சிகளும் இந்த ட்ரெய்லரில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

துப்பாக்கி சத்தங்கள் முழங்க, ரத்தம் தெறிக்கும் செயலராக பீஸ்ட் படத்தின் டிரைலர் அமைந்துள்ளது படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் வந்து ஆன நிலையில் தற்போது படத்தின் டிரைலரும் ட்ரெண்டாகி வருகிறது. தற்போது இணையத்தில் தல, தளபதி ரசிகர்களின் மீம்ஸ்கள் சண்டை ஆரம்பித்துள்ளனர். வலிமை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அந்த சமயத்தில் நடிகர் விஜயின் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை கலாய்த்து தள்ளினர். தற்போது தல ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலரை மீம்ஸ்கள் போட்டு கலாய்த்து வருகின்றனர். எது எப்படியோ, இயக்குனர் நெல்சனின் கடத்தல் பாணியில் உருவாகும் கதையில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் வெற்றி அடைந்த நிலையில் பீஸ்ட் திரைப்படமும் நிச்சயமாக வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் திரையரங்குகளில் காண காத்துக்கொண்டிருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →