ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் வெளியாகி சில எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் நன்றாக இருக்கிறது என்று பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்தப் படம் ஒரு உண்மை கதை என்று இயக்குனர் நெல்சன் கூறுகிறார்.
பீஸ்ட் படத்தில் விஜய் தீவிரவாதிகளிடமிருந்து மக்களை ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து காப்பாற்றுவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட எத்தனையோ படங்களை நாம் பார்த்திருந்தாலும் இப்படத்தில் விஜய் செய்யும் எதார்த்தமான வேலைகள் அனைத்தும் அனைவரையும் ரசிக்க வைக்கின்றது.
அதிலும் தீவிரவாதிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் விஜய் ரொம்ப சிம்பிளாக ஹேண்டில் செய்தது ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதேபோன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்தது.
அப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் ஏர் இந்தியா விமானத்தை கடத்த திட்டமிட்டு கந்தஹாரில் அதை சிறைப்பிடித்தனர். அப்படி சிறைப்பிடித்த மக்களை பணயமாக வைத்து கொண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தலைவன் அசாரை விடுவிக்கும்படி அவர்கள் நம் நாட்டிற்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் அப்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களை காப்பாற்றுவதற்காக இந்திய அரசும் வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அந்த தீவிரவாதியை விடுதலை செய்து அனைவரையும் காப்பாற்றியது.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் இப்படி ஒரு காட்சியை வைத்துள்ளார். அதில் சிறு மாற்றம் செய்து விமானம் போல் இல்லாமல் ஷாப்பிங் மாலாக அதை அவர் மாற்றி இருக்கிறார். அதனால் தான் இப்படம் துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போலிருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.