திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்க்கு முன்னாடி இளையதளபதி பட்டம் வைத்திருந்த ஹீரோ.. அடுத்த விஜயகாந்த் என பெயர் எடுத்த நடிகர்

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை குறித்து சோசியல் மீடியாவில் பல விவாதங்கள் எழுகிறது. இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் திரை பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் விமர்சிக்கின்றனர்.

அதிலும் விஜய் இப்பொழுது இளைய தளபதி பட்டத்தோடு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று இப்பொழுது சமூக வலைதளத்தில் ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் அவருக்கு முன்னாடியே அந்த பட்டத்தை ஒரு மாஸ் நடிகர் வைத்திருந்தார்.

Also Read: 30 வயது நடிகைக்காக பினாமியை வைத்து படம் எடுக்கும் விஜய்.. அடுத்தடுத்து கசியும் தளபதியின் சுயரூபம்

2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான பருத்திவீரன் படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்ஸில் கலக்கிய சித்தப்பு சரவணன் தான் முதலில் இளைய தளபதி என்று அழைக்கப்பட்டார். இவர் 1991 ஆம் ஆண்டு முதல் சுமார் 26 படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவை கலக்கியவர்.

1991 ஆம் ஆண்டு வைதேகி வந்தாச்சு படத்தில் ஹீரோவாக அறிமுகமான சரவணன் அதன்பின் டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுத்த நடிகராக மாறினார். அதிலும் சரவணன் விஜய்க்கு முன்பே இளைய தளபதி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர்.

Also Read: அசைவம் சாப்பிட்டால் சீக்கிரம் இறந்து விடுவோமா.? வாய கொடுத்து புண்ணாக்கி கிட்ட சூப்பர் ஸ்டார்

இவர் நடித்த படங்களில் எல்லாம் இவருடைய டைட்டில் இளைய தளபதி சரவணன் என்று போடப்பட்டது. இவர் நன்றாக ஆக்சன் படங்கள் பண்ணுவதால் அடுத்த விஜயகாந்த் என்று கூட அழைக்கப்பட்டார். மேலும் வெள்ளி திரையில் கலக்கிய சரவணன் சினிமாவில் இப்போது குணசத்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே சமயம் சின்னத்திரைக்கும் என்ட்ரி கொடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி என்ற சீரியலில் 4 பெண் குழந்தைகளுக்கு தந்தையாக ஸ்ட்ராங்கான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை 90களில் இளைய தளபதி மற்றும் அடுத்த விஜய்காந்த் என ரசிகர்கள் பெருமைப்படுத்திய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

Also Read: விஜய் நடுத்தெருவுக்கு வருவார், சாபமிட்ட மனைவி.. கேட்பார் பேச்சைக் கேட்டு தவறாக போகும் தளபதி.!

Trending News