புதன்கிழமை, ஜனவரி 15, 2025

80களில் வெளியான 5 டாப் பிளேபாய் மூவிஸ்.. ரஜினியை தூக்கி சாப்பிட்ட 2 நடிகர்கள்

இன்றைய காலங்களில் பிளேபாய் கதைகளும், காட்சிகளும் ரொம்ப ஈஸியாக செய்து விடுவார்கள். ஒரு ஹீரோ 2,3 பெண்களை காதலித்து அதில் ஒரு பெண்ணை செலக்ட் செய்வது, ஒரு ஹீரோ பல பெண்களுடன் பழகுவது என எல்லா விதமான பிளேபாய் கதைகளும் வந்துவிட்டது. ஆனால் இதையெல்லாம் 80 களிலேயே பல நடிகர்கள் பெஸ்ட்டாக செய்து இருக்கின்றனர்.

நெற்றிக்கண்: நெற்றிக்கண் 1981 ஆம் ஆண்டு இயக்குனர் SP முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம். இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் அப்பா மகனாக நடித்திருந்தார். சரிதா, லட்சுமி, மேனகா நடித்திருந்தனர்.இந்த படத்தில் வரும் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பாடலிலேயே அப்பா ரஜினியின் மொத்த கேரக்டரையும் சொல்லி இருப்பார்கள். பிளேபாயாக இருக்கும் அப்பாவை மகன் திருத்துவது போல் இந்த கதை அமைந்து இருக்கும்.

Also Read: சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் கேரக்டர்.. வாய்ப்பு கேட்டும் கொடுக்க மறுத்த மணிரத்தினம்

சிகப்பு ரோஜாக்கள்: சிகப்பு ரோஜாக்கள், பாரதிராஜா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி நடித்த திரைப்படம். இது பிளேபாய் படமாக மட்டுமில்லாமல் பயங்கர த்ரில்லராகவும் இருக்கும் படம். ஒவ்வொரு பெண்களையும் காதலித்து கொலை செய்யும் சைக்கோ கேரக்டரில் கமல் நடித்திருப்பார்,

நூறாவது நாள்: 1984 ஆம் ஆண்டு இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் மோகன், நளினி, விஜயகாந்த் நடித்த திரைப்படம். குறைந்த பட்ஜெட்டில் 12 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்த படத்தில் வரும் விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்..’ பாடலை இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணனே எழுதி இருந்தார்.

Also Read: மணிவண்ணன் இயக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 6 படங்கள்.. மாஸ் பண்ணிருக்காரு மனுஷன்

சின்னவீடு: பாக்யராஜ் கதை இயக்கத்தில் வெளியான படம் சின்னவீடு. இந்த படத்தில் மதனகோபால் என்னும் கேரக்டரில் வரும் பாக்யராஜ் அவருடைய மனைவி அழகாக இல்லை என நினைத்து வேறு ஒரு பெண்ணுடன் பழகுவார். பின்பு அந்த பெண் கெட்டவள் என தெரிந்ததும் அவளிடம் இருந்து விலகி வருவது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும்.

டிக் டிக் டிக்: பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் டிக் டிக் டிக். போட்டோகிராபராக வரும் கமல் அழகி போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மூன்று பெண்களுடன் நட்பாக பழகுவார். வில்லன் இந்த பெண்களின் மூலம் கடத்தல் பணிகளை செய்து கொண்டிருப்பார். இதனால் ஒரு ஒரு பெண்களாக இறந்து கொண்டே வருவார்கள். இந்த கொலைக்கான காரணத்தை கமல் கண்டுபிடிப்பார்.

Also Read: பாரதிராஜாவின் மருத்துவ செலவை கூட கட்ட முடியாமல் இருக்கும் குடும்பம்.. உதவிய பெரும்புள்ளி

Trending News