ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

700வது படத்தில் கால் பதிக்கும் பாக்யராஜ் பட ஹீரோயின்.. மனோரமாவை ஓவர் டேக் செய்ய முயற்சி

Actress Manorama: சுமார் 1000 திற்கும் மேற்பட்ட படங்களை நடித்து சாதனை படைத்த நாயகி தான் ஆச்சி மனோரமா. நகைச்சுவை நடிகை ஆகவும், குணச்சித்திர நடிகை ஆகவும் பின்னி பெடல் எடுத்த இவரை ஓவர் டேக் செய்ய முயற்சிக்கும் நடிகை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

பிரபலங்களோடு ஜோடி போட்டு முன்னணி கதாநாயகியாக இருந்து தற்பொழுது ஆச்சியை போலவே நகைச்சுவையை மேற்கொண்டு வரும் ஊர்வசி தன் 700 ஆவது படத்தை நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வெற்றி கண்டவர்.

Also Read: அண்ணன், தம்பி என மாறி மாறி அனுபவித்த நடிகை.. கல்யாணத்துக்கு நோ சொன்ன அப்பா

தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் வரும் ஜூலை 29 முதல் ஒடிடியில் வெளியாகப் போகும் படம் தான் அப்பத்தா. தனிமையில் வாழும் அப்பத்தாவிற்கு, தன் மகனிடம் இருந்து அழைப்பு வருகிறது. அதைத்தொடர்ந்து மகன் வீட்டில் நாயுடன் இவர் மேற்கொள்ளும் சம்பவங்களை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

மலையாள மொழி படங்களில் அறிமுகமாகி, அதன்பின் கமல், சத்யராஜ், பாக்யராஜ் உடன் இணைந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஊர்வசி. தன் எளிமையான நடிப்பாலும், அழகாலும் தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நாயகியாய் திகழ்ந்தவர்.

Also Read: எதிர்பார்க்காமல் வசூல் வேட்டையாடிய 5 படங்கள்.. விஸ்வரூப வளர்ச்சியில் மிமிக்கிரி மணிகண்டன்

அவ்வாறு முக்கிய ஹீரோயின் பட்டியலில் இருந்த இவர் தற்பொழுது நகைச்சுவையை கையில் எடுத்துள்ளார். அதேபோல் வீட்டில விசேஷம், காசேதான் கடவுளடா, யானை முகத்தான் போன்ற படங்களிலும் தொடர்ந்து இவர் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

இவரின் காமெடி நடிப்பை கொண்டு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குடும்பம் ஒன்று கூடி பார்க்கும் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் மூவிஸை தேர்ந்தெடுத்து வருகிறார் ஊர்வசி. இதை பார்க்கையில் ஆச்சியை முறியடிக்க அப்பத்தா களம் இறங்கி உள்ளார் என பேசப்பட்டு வருகிறார்.

Also Read: உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. நயன்தாரா ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து கிளாமர் ரூட்டுக்கு மாறிய நடிகை

Trending News