வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பாரதிராஜா நடிப்பிலும் ஜொலித்த 6 படங்கள்.. வில்லனாக நடித்து சூர்யாவை மிரட்டிய இயக்குனர் இமயம்

தமிழ் சினிமாவின் சிகரம் தொட்ட இயக்குனர் என்றாலே அது பாரதிராஜா தான். அப்படிப்பட்ட இவர் சில படங்களில் நடித்து அதிலும் வெற்றி பெற்று இருக்கிறார். இவர் நடிப்பில் அதிக அளவில் வெற்றி பெற்ற ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

நம்ம வீட்டு பிள்ளை: பாண்டிராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இம்மானுவேல், சமுத்திரக்கனி, சூரி மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தார்கள். இதில் பாரதிராஜா, சிவகார்த்திகேயனின் தாத்தாவாக நடித்திருப்பார். இதில் இவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எதார்த்தமாக நடித்துக் காட்டி இருப்பார்.

படைவீரன்: தனா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு படைவீரன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய் யேசுதாஸ், அறிமுக நடிகை அமிர்தா ஐயர், மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்தார்கள். இந்தப் படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் பாரதிராஜா கதாநாயகனுக்கு மாமா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பின் திறமையை வெளிக்காட்டி இருப்பார்.

Also read: மண் வாசனையுடன் சினிமாவிற்கு பெருமை சேர்த்த பாரதிராஜாவின் 6 படங்கள்.. 200 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி படம்

குரங்கு பொம்மை: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு குரங்கு பொம்மை என்ற திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விதார்த், டெல்னா டேவிஸ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்தார்கள். இதில் பாரதிராஜா துணை கதாநாயகன் என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்த படத்தில் இருக்கும் சூழ்நிலையை அழகாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு வசனங்களை பேசி நடித்துக் காட்டி இருப்பார்.

பாண்டியநாடு: சுசீந்திரன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு பாண்டியநாடு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஷால், லட்சுமிமேனன், சூரி, விக்ராந்த் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் விஷாலுக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்திருப்பார். இந்த படத்தில் மிகப்பெரிய ஹைலைட் என்றால் இவருக்கு வயதாகி இருந்தாலும் தன் மகனை கொன்றதற்கு பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுவார். இவரது நடிப்பை எதார்த்தமாக காட்டியிருப்பார்.

Also read: பாரதிராஜாவால் திரும்ப எடுக்க முடியாத 6 படங்கள்.. ரஜினியே மறக்க முடியாத பரட்டை-சப்பாணி காம்போ

ஆயுத எழுத்து: மணிரத்தினம் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ஆயுத எழுத்து திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் பாரதிராஜா நடித்திருப்பார்கள். இதில் பாரதிராஜா அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் சூர்யாவிற்கும், பாரதிராஜாவுக்கும் ஏற்பட்ட காட்சிகள் மெய்சிலிர்க்கும் படியாக அமைந்திருக்கும்.

திருச்சிற்றம்பலம்: மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், ராஷி கண்ணா மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தார்கள். இதில் தனுஷுக்கு தாத்தாவாக நடித்து அவருக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருந்து இவரது எதார்த்தமான நடிப்பை காட்டியிருப்பார்.

Also read: லோகேஷ்க்கு முன்பே மல்டி யுனிவர்சை முயற்சி செய்த இயக்குனர்கள்.. பாரதிராஜா படத்துல இத கவனிச்சீங்களா!

Trending News