வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

மனதில் இருந்த உண்மைகளை போட்டுடைத்த ராஜு பாய்.. தவியாய் தவித்த சிம்பு

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் டைட்டில் வின்னர்களான ரித்திகா மற்றும் ராஜு ஆகியோர் பங்கு பெற்றனர். இந்நிலையில் ராஜு பைனல் லிஸ்ட் போட்டியாளர்களான நீருப், தாமரை, பாலா, ரம்யா பாண்டியன் ஆகியோர் பற்றி பேசினார்.

பிக் பாஸ் சீசன் 5 வில் ராஜீவுடன் நீருப், தாமரை இருவரும் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தனர். இந்நிலையில் அப்போது நீருப் எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவார் என்றும், தற்போது மிகவும் அமைதியாக உள்ளார் என ராஜு கலாய்த்து பேசினார்.

மேலும் சாதாரண பிரச்சனை கூட அவ்வளவு கோபப்படுவார், நான் பாத்ரூம் போய் விட்டு வருகிறேன் என்று சொன்னால் கூட எதுக்குப்பா பாத்ரூம் போற என கத்துவார். தற்போது அங்கு பெரிய பூதாகரமான பிரச்சினை என்றாலும் தனக்கு எதுக்கு வம்பு என்பது போல அடக்கி வாசிக்கிறார் என ராஜு கூறியுள்ளார்.

பிக் பாஸ் வந்தால் எல்லோரும் ஒல்லியாகிட்டே போவாங்க ஆனால் தாமரை பெரிதாகிக்கொண்டே போறாங்க. ஆரம்பத்தில் துணி இல்ல துணி இல்லைன்னு சொல்லிட்டு இப்ப கை முழுக்க துணிய போட்யிருக்கு என தாமரையைக் கலாய்த்து பேசினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தாமரை, புருஷனை தவிர வீட்டுக்குச பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டார் என கூறினார். தாமரை முக்கா வருஷமா பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இருக்கா முதல்ல அவளை அடித்துத் துரத்துங்க என விளையாட்டாக கூறினார்.

மேலும், பாலா எனக்குப்பிடித்த போட்டியாளர் என ராஜூ கூறினார். இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டதிலிருந்து ரம்யா பாண்டியனை பிடிக்கும், அவரது போட்டோக்களுக்கு எப்பொழுதும் லைக் போடுவேன் என்று கூறினார். ராஜு ஒவ்வொருவரையும் கலாய்த்து பேசும்பொழுது சிம்புவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

Trending News