ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

3 விக்கெட் கீப்பர்களுக்கிடையே நடக்கும் போராட்டம்.. செய்வதறியாது முழிக்கும் கிரிக்கெட் போர்ட்

2022உலக கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த போட்டிக்கு அனைத்து நாடுகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிரடியாக சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறக்கவிடும் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் டி20 தொடர் துவங்குவதற்கு முன்பாக ஜிம்பாப்வே சென்று மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது இந்திய அணி. இந்தத் தொடரில் முக்கியமான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி உலக கோப்பைக்கு தயாராகிவரும் இந்திய அணியை அனுப்பியுள்ளனர்.

தற்போது இந்திய அணி ஒரு பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறது அதில் விக்கெட் கீப்பர்களாகிய ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் மற்றும் இஷான் கிஷான் ஆகிய மூவரும் நல்ல பார்மில் இருந்து வருகிறார்கள். இவர்கள் மூன்று பேரையும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறது இந்திய அணி.

20 ஓவர் போட்டிகளில் தவிர்க்கமுடியாத இடத்தில் இருந்து வருகிறார் தினேஷ் கார்த்திக். சிறந்த மேட்ச் வின்னராகவும் செயல்பட்டு வருகிறார். எனவே அவர் 20 ஓவர் உலகக் கோப்பையில் முக்கியமான பங்கு வகிப்பார். அதனால் அவரை அணியிலிருந்து நீக்குவதற்கு வாய்ப்பில்லை.

ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடும் ரிஷப் பண்ட்டும் போட்டிகளை முடித்து தருவதில் வல்லவர். அவரையும் அணியிலிருந்து நீக்குவது கடினம். இந்திய அணியில் வெளி மண்ணில் நன்றாக அடித்து விளையாடும் வீரர் ரிஷப் பண்ட்.

மூன்றாவதாக இந்திய அணியில் விக்கெட் கீப்பராக செயல்படுபவர் இஷான் கிஷான். இவர் ரோகித் சர்மாவுடன் ஓபனிங் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடும் இளம் வீரர். இவரும் போட்டியை இந்தியா பக்கம் மாற்றக்கூடிய ஒரு திறமையான வீரர்.

இவர்கள் மூவரையும் இந்திய அணியில் எடுத்தால் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும். இதனால் பிசிசிஐ தேர்வு முடிவில் பல மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News