படத்தின் டைட்டிலே பழைய டைட்டில் அக இருக்கிறது. இது யார் வைத்தார்கள் என்று தெரியவில்லை. சன் பிக்சர்ஸ் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். செல்வராகவன் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்க, சன் பிக்சர்ஸ் அதை தயாரித்து, படம் வெற்றிகரமாக முடிவடைந்தது.
இந்த படத்தில் கதை முழுவதும் தனுஷ் உடையது, அதை தன் அண்ணன் செல்வராகவனிடம் சொல்லி இயக்க வைத்திருக்கிறார் தம்பி தனுஷ். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு பல பிரச்சினைகள் வந்துள்ளது.
அண்ணனாகிய செல்வராகவன் ஒருவரை சிபாரிசு செய்ய, தம்பி ஒருவரை சிபாரிசு செய்ய முதலில் இருந்து ஒரு மோதலில் தான் இந்தப் படம் சென்றுள்ளது. உதாரணமாக இந்த படத்தில் அண்ணன் ஒருவரை கேமராமேனாக பணியாற்ற அழைக்க, அதையும் தனுஷ் வேண்டாம் என்று சொல்லி தடுத்திருக்கிறார். இப்படி சின்ன, சின்ன பிரச்சினைகளில் ஆரம்பித்த சண்டை படம் முடியும் பொழுது முற்றிவிட்டது என்று கூறுகின்றனர்.
இப்பொழுது தனுஷ் நான் உன்னிடம் சொல்லிய கதையே வேற, நீ எடுத்து வைத்திருப்பது வேற என்று உச்சகட்ட அதிருப்தியில் இருந்து வருகிறாராம். இப்படி இவர்கள் சண்டையிடுவது படம் ஓடுமா,ஓடாதா என்று பெரிய பிரச்சனையை கிளப்பி உள்ளது.
செல்வராகவன் ஒரு இயக்குனர். அவருக்கென்று ஒரு, சில ஐடியாலஜி இருக்கும் அதை வைத்துக்கொண்டு அவர் படத்தை தன் பாணியில் எடுத்து விட்டார் . இதை தான் குற்றம் என முன் வைத்திருக்கிறார் தனுஷ்.
ஆனால் தனுசை வளர்த்து விட்டவர் அண்ணன் செல்வராகவன் தான். அவர் படங்களில் நடித்து தான் தனுஷ் ஒரு வெற்றி நாயகனாக உலா வந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது இருவருக்கும் அடிதடி வராதது ஒன்றுதான் குறை. மொத்தத்தில் இருவருக்கும் பிரச்சனை பெரிதாகி உள்ளது என்பது மறுக்கப்படாத உண்மை.