மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடவுள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி ஞாயிறன்று தொடங்கவிருக்கிறது.
இந்த தொடருக்கு தயாராகிவரும் இந்திய அணிக்கு கொரோனாவால் பெரும் சிக்கல் உருவாகியிருக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக அகமதாபாத்தில் இந்திய அணி வீரர்கள் தங்கி இருக்கின்றனர்.
இந்திய அணியில் கே எல் ராகுல் தனது தங்கை திருமணத்திற்கு சென்றுள்ளார். அவரை தவிர மீதமுள்ள வீரர்களாகிய ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், நவ்தீப் சைனி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் பட்டேல் என 5 வீரர்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஓப்பனிங் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால், முதல் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு சிக்கல் உண்டானது.
நான் அசர மாட்டேன் என்ற எண்ணத்தில் ரோகித் சர்மா, புதிய உத்தியை கையாண்டு உள்ளார். 20 ஓவர் போட்டியில் மட்டுமே தேர்வாகிய இஷான் கிசானை, ஒருநாள் போட்டி அணியிலும் இணைத்துள்ளார். அதனால் அவரே ரோகித்துடன் ஓபனராக களமிறங்குவார்.
இளம் வீரரான இசான் கிசான் ஏற்கனவே இலங்கைக்கு எதிரான அறிமுக போட்டியில் அரைசதம் அடித்துள்ளார். இவர் வருவது இந்திய அணிக்கு சற்று பலத்தை அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடரை கோட்டை விட்டது போல், இதனை நாங்கள் விடமாட்டோம் என ரோஹித் புது முயற்சிகளை எடுத்து இந்திய அணிக்கு பலம் சேர்த்து வருகிறார்.