வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திடுதிப்புன்னு நடந்த பிக்பாஸ் எவிக்சன்.. அர்த்த ராத்திரியில் மூட்டை முடிச்சை கட்டிய போட்டியாளர்

Biggboss 7: நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி பயங்கர கலகலப்பாக இருந்தது. போட்டியாளர்களின் டான்ஸ் மாரத்தான் சுவாரஸ்யம் கலந்த நகைச்சுவையாக இருந்ததில் இப்போதுதான் நிகழ்ச்சி மீதான ஆர்வமே வந்திருக்கிறது.

அதிலும் மாயா போட்ட ஆட்டம் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ நிச்சயம் யாரும் எதிர்பார்க்காதது. அதாவது பிக் பாஸில் எப்போதும் வார இறுதியில் தான் எலிமினேஷன் நடக்கும்.

ஆனால் இப்போது நடு வாரத்தில் (mid week) எவிக்சன் நடைபெற்றிருக்கிறது. இதை எதிர்பார்க்காத ஹவுஸ் மேட்ஸ் வெளிப்படையாகவே தங்கள் அதிர்ச்சியை காட்டுகின்றனர். அந்த வகையில் நாமினேஷனில் சிக்கிய அத்தனை பேரையும் வரிசையாக பிக்பாஸ் நிற்க சொல்கிறார்.

Also read: என்ன நடந்தாலும் பார்த்துகிட்டு சும்மா இருக்க நா என்ன ஆண்டவரா.? நெற்றிக்கண்ணை திறந்து ருத்ரமூர்த்தியான பிக்பாஸ்

அங்கு ஒரு பலகையில் நாமினேஷனில் இருப்பவர்களின் போட்டோவை ஒட்ட சொல்கிறார். அதில் யாருடைய போட்டோ முழுமையடையவில்லையோ அவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பு வருகிறது. இதனால் அனைவரும் உச்சகட்ட டென்ஷனில் இருக்கின்றனர்.

இப்படியாக வெளிவந்துள்ள ப்ரோமோ நமக்கும் ஒரு எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கிறது. ஆனால் இந்த வார ஓட்டுக்களின் அடிப்படையில் கூல் சுரேஷ், அனன்யா ஆகியோர்தான் கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றனர். அதில் கூல் சுரேஷ் நேற்று சுவர் ஏறி குதித்து தப்பிக்க பார்த்தார்.

ஆனால் எப்படியோ அவர் சமாதானப்படுத்தப்பட்டு மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இதை வைத்து பார்க்கும் போது தற்போது மூட்டை முடிச்சை கட்டியது இவராகத்தான் இருக்கும் என தெரிகிறது. மறுபடியும் ஏதாவது சேட்டை செய்தால் என்ன செய்வது என நினைத்து தான் பிக் பாஸ் அர்த்த ராத்திரியில் இவரை வெளியேற்றும் முடிவுக்கு வந்திருப்பார்.

Also read: ரெண்டாக பிரியும் மாயா, பூர்ணிமாவின் Bully கேங்.. இனிமேதான செல்ல குட்டி ஆட்டமே ஆரம்பம்

Trending News