விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பும், சுவாரசியமும் கலந்து ஓடி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் சிலர் தங்களுடைய உண்மை முகத்தை காட்டினாலும் பலர் அதை மறைத்து பொய்யாக நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான ரட்சிதா மகாலட்சுமி இந்த நிகழ்ச்சியில் ஒரு முகத்திரையுடன் வலம் வருவதாகவே ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். என்னதான் ஒருவர் தன்னுடைய சுயத்தை மறைத்து அந்த வீட்டுக்குள் இருந்தாலும் ஏதாவது ஒரு சில நேரங்களில் தங்களுடைய கோபம் வெளிப்பட்டுவிடும்.
ஆனால் ரட்சிதா எல்லா நேரமும் கோபத்தை மறைத்துக் கொண்டு இந்த விளையாட்டை விளையாடி வருவது சில விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். அதாவது கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் ரட்சிதா சரோஜாதேவி போன்ற கெட்டப் போட்டு சீதா தேவியாக மாறினார்.
அதற்கு ஏற்றார் போல் அவர் பேசியது, நடனம் ஆடியது என அனைத்தும் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இதை குறிப்பிட்ட பயில்வான் ரட்சிதா தன்னை ஒரு கற்புக்கரசியாக காட்டிக் கொள்கிறார் என்றும் சக ஆண் போட்டியாளர்களை தன்னுடன் டான்ஸ் ஆட கூட அவர் அனுமதிக்கவில்லை என்றும் விமர்சித்திருக்கிறார். மேலும் சீரியல்களில் அவர் நடிகர்களுடன் நெருக்கமாக நடித்துவிட்டு இங்கு பொய்யாக நாடகமாடுகிறார் என்றும் கூறியிருந்தார்.
Also read: புடவைல எரும மாடு மாதிரி இருக்க.. போட்டியாளரை கண்ட மேனி திட்டி பதிவிட்ட ரட்சிதாவின் முன்னாள் கணவன்
இதற்கு சில எதிர்ப்புகள் இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் அதை ஆமோதிக்கின்றனர். ஏனென்றால் ரட்சிதா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த நாளிலிருந்து தன்னுடைய பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார். அதனால் விளையாட்டை கூட அவர் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வோடு தான் விளையாடி வருகிறார்.
அந்த வகையில் இவர் பப்ளிசிட்டிக்காக கோவம் வந்தால் கூட அதை வெளிக்காட்டாமல் தந்திரத்தோடு விளையாடி வருவதாகவே தெரிகிறது. தற்போது போட்டிகள் கடுமையாகி விட்டதால் இனிமேல் அவருடைய இந்த பிளான் வொர்க் அவுட் ஆகாது என்றும் ரட்சிதாவின் முகத்திரை விரைவில் கிழியப்போகிறது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also read: ரட்சிதாவை சைட் அடித்ததற்கு இத்தனை கோடியா?. ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸில் வாங்கிய சம்பளம்