வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஓவர் கெத்து காட்டிய விச்சு, அச்சு.. ஒரே நாளில் ஆட்டத்தை மாற்றிய பிக்பாஸ்

Biggboss 7: கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவை பிக்பாஸ் தான் ஆக்கிரமித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன் கடும் சர்ச்சையை சந்தித்து வருவதே அதற்கு முக்கிய காரணம். எப்பவுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் போட்டியாளர்கள் தான் கெட்ட பெயரை சம்பாதிப்பார்கள்.

ஆனால் இந்த சீசனை பொறுத்தவரை கமலுடைய பெயர் தான் டோட்டல் டேமேஜ் ஆகி இருக்கிறது. அந்த அளவுக்கு அவருக்கு எதிரான கருத்துக்கள் இப்போது வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீடு சதா நேரமும் சண்டை சச்சரவுமாக இருப்பதும் எரிச்சல்படுத்தி வருகிறது.

அதிலும் வார இறுதியில் வரும் கைத்தட்டல்களை வைத்து ஒவ்வொரு வாரமும் அக்கப்போர் கூட்டும் போட்டியாளர்களும் இருக்கின்றனர். அதில் கடந்த வாரம் விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவரின் அட்ராசிட்டியும் கொஞ்சம் அதிகமாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஆடியன்ஸ் காப்பாற்றி விடுவார்கள் என்ற தைரியம் தான்.

Also read: நிக்சனுக்கு எதிராக அர்ச்சனா கையில் எடுத்த ஆயுதம்.. குள்ளநரித்தனத்தை தோலுரித்த ஆண்டவர்

அதையெல்லாம் கவனித்து வந்த பிக்பாஸ் குழு இந்த வாரம் நிகழ்ச்சியை காண வந்த பார்வையாளர்களுக்கு ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறார்கள். அதன்படி விசித்ரா, அர்ச்சனா வரும்போது யாரும் கைதட்ட கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டார்களாம்.

மேலும் கமல் பேசும்போது மட்டும் கைதட்டினால் போதும் என்று பிக் பாஸ் டீமிலிருந்து கூறப்பட்டிருக்கிறது. இதனால் நிச்சயம் வீட்டுக்குள் ஒரு குழப்பம் ஏற்படும். ஏனென்றால் மாயா, பூர்ணிமா இந்த கைதட்டலை வைத்து தான் விளையாட்டை நிர்ணயிக்கிறார்கள்.

அதேபோன்று தான் மற்றவர்களும் ஒரு பிளான் போட்டு சுவாரஸ்யத்தை குறைக்கிறார்கள். அதனாலேயே இப்படி ஒரு மாற்றத்தை விஜய் டிவி கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் இந்த வார ஆட்டம் மாறுவதோடு சில உண்மை முகங்களும் வெளிவரும் வாய்ப்பும் உள்ளது.

Also read: நீ பிக்பாஸுக்கு தேவையில்லாத ஆணி.. பூமர் அங்கிளை கிழித்து தோரணம் கட்டிய கமல்

Trending News