Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

என்ன ஜென்மம் டா நீ கைய கடிக்கிற, கட்டிப்பிடிக்கிற.. காமவெறியில் அடுத்தடுத்து வெளிவரும் அசலின் வீடியோ

என்ன ஜென்மம் டா நீ கைய கடிக்கிற, கட்டிப்பிடிக்கிற.. காமவெறியில் அடுத்தடுத்து வெளிவரும் அசலின் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் முதலாவதாக ஜி பி முத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது பலருக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. ஏனென்றால் […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் முதலாவதாக ஜி பி முத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது பலருக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. ஏனென்றால் ரசிகர்களை என்டர்டைன்மெண்ட் உடன் ஜி பி முத்து வைத்திருந்தார்.

இப்போது ரசிகர்களை எரிச்சல் ஊட்டும் படியாக ஒருவர் செயல்பட்டு வருகிறார். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் குறைந்த வயதை உடைய ஆண் போட்டியாளர் அசல் கோலாறு. இவருக்கும் தனலட்சுமிக்கும் நடுவில் ஏற்பட்ட பிரச்சனை பிக் பாஸ் வீட்டில் பிரளயத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் எல்லா பெண்களையும் தொட்டுப் பார்ப்பது, தடவி பார்ப்பது என பல சித்து வேலைகளை அசல் செய்து வருகிறார். இவர் செய்யும் அருவருப்பான வேலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. மகாலட்சுமி, குவின்ஸி, ஜனனி என எல்லா பெண்களிடமும் சில்மிஷம் செய்து வருகிறார் அசல்.

அதிலும் அதிகமாக சிங்கப்பூர் மாடலான நிவாஷினி உடன் அசல் சுற்றித் திரிகிறார். சில நாட்களாக நிவா யாரு உடனும் பேசாமல் இருந்த நிலையில் பாடிய அவரை கரெக்ட்செய்துள்ளார் அசல். இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அதில் சில சமயங்களில் எல்லை மீறி அசல் அநாகரிகம் நடந்து கொள்வது ரசிகர்களை முகம் சுளிக்கும்படி வைக்கிறது.

இந்த ஐந்து சீசன்களில் அசல் போன்ற ஒரு நபரை பார்த்ததில்லை என்று நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். பல பேர் பார்க்கக்கூடிய ஒரு பொது நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்து கொள்கிறோமே என்ற அறிவு கூட அசலுக்கு இல்லையா என பலரும் திட்டி வருகிறார்கள். மேலும் அசலின் நடவடிக்கையை பார்த்த ஆயிஷா நிவாஷினிக்கு அறிவுரை கூறினார்.

asal-bigg-boss

அதை ஏற்றுக் கொள்ள முடியாத நிவா இந்த வாரம் நாமினேஷனில் ஆயிஷாவை தேர்வு செய்துள்ளார். கடந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்த அசல் இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளார். இதனால் கண்டிப்பாக இந்த வாரம் அசல் வெளியேறுவார் என பலரும் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

asal-bigg-boss
asal-bigg-boss
A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.