திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எகிற போகும் டிஆர்பி, என்ட்ரி கொடுக்கும் தலைவி.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ்

Biggboss 7: எத்தனை ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் பிக்பாஸை அடிச்சுக்க முடியாது. அந்த அளவுக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஏழாவது சீசனை கோலாகலமாக தொடங்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டிருக்கிறது.

இதற்கு மற்றொரு வலுவான காரணமும் இருக்கிறது. ஏனென்றால் இந்த முறை ஒரு வீடு கிடையாது, 2 வீடு அதுவும் 20 போட்டியாளர்கள் என கமல் ப்ரோமோவில் கூறியது வேற லெவல் சர்ப்ரைஸ். அதன்படி புது போட்டியாளர்கள் ஒரு வீட்டிலும் இதற்கு முன்பு கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றொரு வீட்டிலும் தங்கி விளையாட இருக்கிறார்கள்.

Also read: பிக்பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் நான்கு கதாநாயகிகள்.. டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட பக்கா பிளான்

அதில் ரேகா நாயர், பப்லு பிரித்விராஜ் என சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பும் பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இது பற்றிய பல தகவல்கள் இணையத்தில் உலாவரும் நிலையில் பழைய போட்டியாளர்கள் யார் யார் பங்கேற்பார்கள் என்ற ஆர்வமும் ஒரு பக்கம் இருக்கிறது.

அதில் பலரும் எதிர்பார்க்காத தலைவி ஓவியா கலந்துகொள்ள இருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது. பிக்பாஸ் முதல் சீசனில் ஒட்டு மொத்த மக்களின் உள்ளங்களையும் கவர்ந்த இவர் சில பிரச்சனைகளின் காரணமாக பாதியிலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.

Also read: சும்மாவே பேயாட்டம் ஆடும், அந்த நடிகைக்கு சலங்கை கட்டி வேடிக்கை பார்க்கப் போகும் பயில்வான்.. தாறுமாறாக சூடு பிடிக்கும் பிக்பாஸ்

ஆனாலும் அவருக்காக ஒரு தனி ஆர்மியை தொடங்கிய ரசிகர்கள் இப்போது வரை அவரை கொண்டாடி வருகின்றனர். அதனாலேயே விஜய் டிவி தங்களுடைய டிஆர்பியை எகிற வைக்க மீண்டும் ஓவியாவை நிகழ்ச்சிக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக ஓவியாவும் இப்போது சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இடையில் சில காலம் அவரைப் பற்றிய செய்திகள் வெளிவராமல் இருந்த நிலையில் இப்போது அவர் மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பது, வீடியோ போடுவது என்று பிசியாக இருக்கிறார். எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் தான்.

Also read: குடிச்சிட்டு எல்லை மீறும் ஓவியா.. உன்ன எல்லாம் அதுக்கு கூப்பிடலன்னா தான் அதிசயம், பெருமை பேசும் கோண கொண்டைகாரி

Trending News