வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்கும் கொளுத்தி போட்டு வேடிக்கை காட்டும் பிக் பாஸ்.. ரெண்டே நாளில் எகிறப்போகும் டிஆர்பி

Bigg Boss 7: பொதுவாக சின்ன வீடு பெரிய வீடு என்றாலே சண்டைக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் இளம் வயது பசங்களை வச்சு ஆட்டம் காட்டினால் இன்னும் சூடுபிடிக்க தான் செய்யும். அதாவது பிக் பாஸில் இதுவரை நடக்காத ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்றால் ரெண்டு வீடாக பிரித்தது தான். அதில் டாஸ்க் நல்லா பண்றவங்க பெரிய வீட்டிலேயும், சொதப்பலாக ஏனோ தானோ என்று செய்யக்கூடிய போட்டியாளர்களை சின்ன வீட்டிற்கும் அனுப்பப்படுகிறது.

அப்படி ஆறு போட்டியாளர்கள் சின்ன வீட்டிற்கு போவதற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டைப் போய் பார்த்தால் அண்டக்கா கசம் அபூகா கசம் திறந்திடு சீசே என்பது போல் அங்கங்க பிச்சுபோட்டு ஒரு வீடு மாதிரி செட் அப் கொடுத்திருக்காங்க. இந்த வீட்டில் தான் இவர்கள் இருக்க வேண்டும்.

Also read: அட்ராசக்க! புது குணசேகரன் வந்தது ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்.. பிக் பாஸ் காட்டிய பயத்தால் சன் டிவி எடுத்த முடிவு

இதனைத் தொடர்ந்து இங்கு இருப்பவர்கள் தான் சமைக்க வேண்டும். பெரிய வீட்டில் இருப்பவர்கள் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு சுற்றலாம். அடுத்ததாக பெரிய வீட்டில் இருப்பவர்கள் சின்ன வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டும். அதே மாதிரி இந்த வீட்டில் இருப்பவர்கள் பெரிய வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும்.

அந்த வகையில் ஜோவிக்கா தான் அதிகமாக நாமினேட் ஆயிருக்கிறார். அதற்கு காரணம் எப்போதும் அமைதியாக தனிமையிலேயே இருப்பதினால் தான் என்ற காரணத்தை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இவரை பொறுத்தவரை ஆரம்பத்தில் அமைதியாக தான் இருப்பார். போக போக தான் டெரராக மாறி எல்லாத்துக்கும் பதிலடி கொடுக்கப் போகிறார்.

Also read: இந்த வயசுல பொம்பள சோக்கு கேக்குதா?. கணவரை பற்றி அவிழ்த்து விட்ட பிக் பாஸ் பிரபலம்

அம்மா எட்டடி பாஞ்சா, பிள்ளை 16 அடி பாயும். அதுபோல நிறுத்தி நிதானமா விளையாட்டை ஆரம்பிக்கப் போகிறார் ஜோவிக்கா. அடுத்தபடியாக ஒரே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் சண்டையை மூட்டி வேடிக்கை பார்ப்பது தான் பிக் பாஸ். ஆனால் இந்த முறை சின்ன வீடு பெரிய வீடு என்று பிரித்து வைத்து முதலிலேயே கொளுத்தி ஆட்டைய பத்த வச்சிட்டாங்க.

அந்த வகையில் இதுவரை நடந்து முடிந்த ஆறு சீசன்களிலும் இல்லாத டிஆர்பி இதில் எகிறப் போகிறது. அதற்கான பிள்ளையார் சுழி தான் இரண்டு வீடு. எது எப்படியோ இன்னும் மூன்று மாதத்திற்கு மக்களை பரபரப்பாக வைத்து ஆடுபுலி ஆட்டத்தை ஆடப்போகிறது பிக் பாஸ். இதற்கு தலைவராக இருந்து நல்லது கெட்டதை பார்த்து வழிநடத்த போவது உலக நாயகன்.

Also read: முதல் நாளே பத்த வச்சிட்டியே பரட்டை பிக் பாஸ்.. 2வது வீட்டிற்கு துரத்தி விடப்பட்ட 6 போட்டியாளர்கள்

Trending News