செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியே பித்தலாட்டம் தான்.. வெளியேறிய நடிகையின் ஆவேச பேச்சு

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தான் துவங்கப்பட்டது. அதன் பிறகு தற்போது பல மொழிகளிலும் ஒளிபரப்பாகியது. தமிழில் விஜய் டிவியில் இதுவரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்து வரும் அக்டோபர் 9 ஆம் தேதி 6-வது சீசன் தொடங்கப் போகிறது.

இன்னிலையில் பிரபல நடிகை அனுராதாவின் மகளும், நடிகையுமான அபிநயா ஸ்ரீ சமீபத்தில் துவங்கப்பட்ட தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துவங்கிய இரண்டாவது வாரத்திலேயே அபிநயஸ்ரீ வெளியேறியுள்ளார். வெளியேறிய பிறகு, அவர் வெளியிட்டிருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.

Also Read: கிராண்ட் ஃபினாலே உடன் துவங்கப்படும் பிக் பாஸ் சீசன் 6.. ஊத்தி மூடப்பட்ட புத்தம்புது சீரியல்

இதில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பித்தலாட்டத்தை குறித்து ஆவேசத்துடன் பேசியிருக்கிறார். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாம் நினைப்பது போல் பிக் பாஸ் வீட்டில் நடப்பது இல்லை. உண்மையை சொல்லப்போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில்  நான் டாஸ்க் செய்தது, போட்டியாளர்களுடன் வாதிட்டது போன்றவையெல்லாம் காட்டப்படாமல், அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே காட்டி டிஆர்பி ஏற்றுவதற்காக தில்லாலங்கடி வேலைகளை எல்லாம் செய்கிறார்கள்.

மேலும் நான் நாமினேஷனிலிருந்து பிறகு மக்கள் ஓட்டின் மூலம் காப்பாற்றப்பட்ட பிறகும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளேன். அவர்களுக்கு யாரை காப்பாற்ற வேண்டும், யாரை எலிமினேட் செய்யவேண்டும் என முன்கூட்டியே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

Also Read: இணையத்தில் கசிந்த பிக்பாஸ் நடிகையின் பலான வீடியோ.. விளக்கத்தைக் கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்

அப்படி இருக்கும்போது எதற்கு தேவையில்லாமல் ரசிகர்களிடம் ஓட்டுவங்கி நீங்களாகவே எலிமினேட் செய்கிறார்கள் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்க விட்டிருக்கிறார். மேலும் பிக்பாஸ் தமிழில் கமலஹாசன் அனைத்து போட்டியாளர்களிடம் நன்றாக பேசுவார்.

ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை. அவர்களுக்கு தேவையான நபர்களிடம் மட்டுமே பேசி முடிக்கிறார்கள். இதெல்லாம் மிகவும் மனம் வருத்தமடையும் அளவுக்கு செய்தது. மேலும் என்னுடைய அம்மா இதனால் மிகவும் கவலை அடைந்திருக்கிறார். இதனால் பிக்பாஸிடமே கால் செய்து என் மகளை ஏன் காண்பிக்கவில்லை.

Also Read: பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்ட சம்பளம்.. கோடியில் புரளும் உலகநாயகன்

அப்படி காண்பித்தால் ஒரு நிமிடம் மட்டுமே தான் காண்பிக்கிறீர்கள் என்று சண்டை போட்டிருக்கிறார். 24 மணி நேரம் என்று சொன்னீர்கள். அதையும் கட் செய்து காண்பித்தால் எப்படி என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் அட்டூழியத்தை போட்டு உடைத்திருக்கிறார் அபிநயா ஸ்ரீ.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி கமலஹாசன் தொகுத்து வழங்குவது போல தெலுங்கில் நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News