வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சண்டையை மூட்டிவிட்டு ஆட்டத்தை ஆரம்பித்த பிக்பாஸ்.. முதல் வார நாமினேஷன் லிஸ்டில் 4 போட்டியாளர்கள்

விஜய் டிவியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எப்போதுமே இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக்க பிக் பாஸ் பல டாஸ்க்களை கொடுப்பார். ஆனால் போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்த முதல் நாளிலேயே டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

அந்த வகையில் நேற்று போட்டியாளர்களிடம் பேசிய பிக்பாஸ் புது டாஸ்க் ஒன்றையும் கூறினார். அதில் ஹவுஸ் மேட்ஸ் சக போட்டியாளர்களில் யார் சுவாரஸ்யம் குறைந்த நபர்களாக இருக்கிறார்கள் என்பதை தேர்வு செய்து அதில் இரண்டு நபரை சொல்ல வேண்டும் என்று அறிவித்தார். இதன் மூலம் முதல் பார்வையிலேயே போட்டியாளர்கள் மற்றவர்களை எப்படி எடை போட்டுள்ளார்கள் என்பது தெரியவரும் என குறிப்பிட்டார்.

Also read:மெர்சலாக்கிய விஜய் டிவி.. பாலிவுட் ஸ்டைலில் இருக்கும் பிக்பாஸ் வீட்டின் செலவு மட்டும் இவ்வளவா?

அத்துடன் நேற்றைய நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இன்று போட்டியாளர்கள் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்று காட்டப்பட இருக்கிறது. அப்படி நாமினேட் ஆகும் நபர்களில் அதிக ஓட்டு வாங்கிய நான்கு பேர் அடுத்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு நபர்கள் வீட்டிற்கு வெளியே இருக்கும் கார்டன் ஏரியாவில் தான் தங்க வேண்டும் என்ற புது குண்டையும் பிக் பாஸ் போட்டு உள்ளார். இதனால் போட்டியாளர்கள் சற்று பீதி அடைந்தாலும் சுவாரஸ்யம் குறைந்த நபர்களின் பட்டியலை விளக்கமாக கூறுவது போன்ற புரோமோவும் தற்போது வெளியாகி உள்ளது.

Also read:ஆண்டவர் சொல்லி கொடுத்த பாடம்.. மேடையில் மைக் மோகன் பெருமிதம்

அந்த வகையில் போட்டியாளர்கள் நிவா, குயின்சி, ஜனனி, விக்ரம் போன்ற நபர்களின் பெயர்களை தான் அதிகமாக கூறி இருக்கின்றனர். அதனால் இந்த நால்வரும் அடுத்த வார நாமினேசனுக்கு நேரடியாக செல்ல இருக்கின்றனர்.

இப்படி முதல் நாளிலேயே நாமினேஷன் என்ற ட்விஸ்ட்டை வைத்து நிகழ்ச்சியின் சுவாரசியத்தை பிக்பாஸ் உயர்த்தி இருக்கிறார். அவர் பற்ற வைத்த இந்த நெருப்பு இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் எதிரொளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நான்கு போட்டியாளர்களும் நாமினேஷனில் இருந்து தப்பிக்க என்ன செய்வார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read:பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கும் விவாகரத்து நடிகர்.. அப்ப ஒரு லவ் ஸ்டோரி கன்ஃபார்ம்

Trending News